பக்கம்:குமண வள்ளல்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெளிமானும் இளவெளிமானும்

55

முன்பு வெளிமான் சொன்னதை அவர் நினைத்துக் கொண்டார். மற்ற நாட்களாக இருந்தால் அவர் பேசாமல் திரும்பி வந்திருப்பார். வெளிமான் இறந்தான் என்ற துயரத்தைத் தாங்கிய அவர் அவன் தம்பியைக் கண்டு பேசி ஆறுதல் பெறலாம் என்று எண்ணியே நின்றார். கடைசியில் இளவெளிமானைக் கண்டார்.

“தங்கள் தமையனாரோடு பழகியவன் நான். அவருடைய வண்மையை நன்கு உணர்ந்திருக்கிறேன்.” என்று பேச்சைத் தொடங்கினார் பெருஞ்சித்திரனார்,

“இப்படித்தான் பல பேர் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்” என்று கூறினான் இளவெளிமான்.

அப்படிச் சொன்னது அவனது அலட்சிய புத்தியைப் புலப்படுத்தியது. புலவர் அவன் குரலில் இருக்கும் அன்பற்ற தன்மையைத் தெரிந்துகொண்டார். ஆனாலும், ‘வந்தாயிற்று; பேசிவிட்டுப் போவோம்’ என்று மேலும் பேசினார்.

“அவருடைய வள்ளன்மையை அறிந்த புலவர் பலர் அவரை அடைந்து பரிசில் பெற்றார்கள். அவரைக் காணலாம் என்ற ஆசையோடு வந்தேன். தம்மை நாடிய புலவர்களெல்லாரும் பொலிவு அழியும்படியாக, புகழுடம்பை நிறுத்திவிட்டு அவர் போய்விட்டார். அவரை இழந்த துயரம் தங்களுக்குப் பொறுத்தற்கரியதாக இருக்கும்.”

“அதை நினைத்துக்கொண்டிருந்தால் வாழ்வது எப்படி? போகிறவர்கள் போனால், இருக்கிறவர்களும் உடன் போய்விடுவார்களா? அவரவர்களுக்கு வாழ்வு, சுகம் எல்லாம் இல்லையா?” என்ற சொற்கள் இளவெளிமானிடமிருந்து வந்தன.