பக்கம்:குமண வள்ளல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

குமண வள்ளல்

கொண்டு மிக்க மகிழ்ச்சியோடு செல்பவர்களும் இருக்கிறார்கள். எப்போதும் ஒரேமாதிரி கிடைக்கும் என்று எண்ணலாமா?அவ்வப்போது கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு போகவேண்டியதுதான்” என்று அவன் சொன்னான்.

‘அட பாவி நீயும் வெளிமானுக்குத் தம்பியாகப் பிறந்தாயே!’ என்று புலவர் மனத்துக்குள் வைதார். அவருக்குத் துயரமும் சினமும் பொங்கின. ‘இவன் முன் வந்து நிற்கும்படி, போதாத காலம் நமக்கு வந்ததே!’ என்று இரங்கினாலும், இவனுக்குப் புத்தி கற்பிக்கவேண்டும் என்ற ஆத்திரமும் உண்டாயிற்று. மறுபடியும் நெஞ்சைப் பார்த்துச் சொல்வதாகப் பேசினார்; பாடினர். அந்த இழிகுணமுடையவனை விளித்துப் பேசக்கூட அவருக்கு மனம் வரவில்லை.

‘நெஞ்சமே! புறப்படு. போவோம், பருகுவது போன்ற ஆர்வம் உடையவர்களிடம் பழகியிருக்கிறோம். அத்தகைய வேட்கையின்றி, அருகிலே வந்து அன்பை எதிர்பார்த்து நிற்கும்போதும் அறியாதவரைப் போல முகத்தைத் திருப்பிக்கொண்டு உள்ளத்தில் சிறிதும் அன்பு இல்லாமல் கொடுக்கும் பரிசிலை பெறும் சோம்பேறிகள் இல்லாமற் போகவில்லை; அப்படியும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் நாம் அந்த வகையைச் சேர்ந்தவர் அல்லோம். வா என்று அன்போடு அழைத்து உபசரிப்பவர்களிடம் போவோம். வரிசையறிந்து பேணுபவர்களைத் தேர்ந்து செல்வோம். உலகம் பெரிது. புலவர்களைப் போற்றிப் பேணுகிறவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் அத்தகையவர்களுக்குப் பஞ்சம் உண்டாகவில்லை. சிங்கத்துக்குத் தன் காடு பிறன் காடு என்பது இல்லை. சிங்கத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/64&oldid=1362616" இலிருந்து மீள்விக்கப்பட்டது