பக்கம்:குமண வள்ளல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

குமண வள்ளல்

 Invalid template invocation→வது,விருந்துண்ணுவது, புறத்தே சென்று இயற்கைக் காட்சிகளைக் கண்டு இன்புறுவது, தமிழின்பம் நுகர்வது, மனங் கலந்து பேசி மகிழ்வது, குமணனைக் காண வரும் பிற புலவர்களோடு பேசிக் களிப்பது—இப்படியாக ஒவ்வொரு நாளும் பெருஞ்சித்திரனாருக்கு இனிமையாகப் போய்க் கொண்டிருந்தது.

ஆயினும், இளவெளிமானுக்குச் சூடு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் புலவர் மனத்தில் இருந்துகொண்டே இருந்தது. குமண வள்ளலிடம் யானையைப் பெற்றுக்கொண்டு போய், “இதோ பார், நான் பெற்ற பரிசிலை” என்று அவனுக்குக் காட்ட வேண்டும் என்பது அவருடைய ஆசை. அதை நிறைவேற்றிக்கொள்ளும் செவ்வியை அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் மாலை நேரத்தில் காலாரக் குமணனும் புலவரும் முதிரமலைப் பக்கத்திற்குச் சென்று உலாத்திக் கொண்டிருந்தார்கள். பேச்சுக்கு நடுவிலே கங்கை வந்தது. அது எந்தக் காலத்திலும் வற்றாமல் இருப்பது என்று குமணன் சொன்னான். புலவர் அது கேட்டு, “நான் அந்தக் கங்கையைக் கண்டதில்லை. ஆனால் என்றும் வற்றாத வேறு ஒரு கங்கையைக் கண்டிருக்கிறேன்” என்றார்.

“காவிரியைச் சொல்கிறீர்களோ?

“இல்லை; இல்லை. மேகங்கள் எல்லாம் சமுத்திரத்திலுள்ள தண்ணீரை முகந்துகொண்டு மலை முகடுகளிற் கூடி நிறைய மழை பெய்கின்றன, மாரிக் காலத்தில் கோடை வந்தால் அந்த மழை மாறி விடுகிறது. கதிரவன் தன் வெம்மைக் கதிர்களை வீச, மக்கள் வெப்பத்தால் நலிகிறார்கள். பல ஆறுகள் தண்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/68&oldid=1362631" இலிருந்து மீள்விக்கப்பட்டது