பக்கம்:குமண வள்ளல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

குமண வள்ளல்

“நீங்கள் பேசுவதைப் பார்த்தால் ஊருக்குப் போக அடிகோலுகிறதாக நினைக்கிறேன். உங்களுக்கு இப்போது என்ன குறை வந்துவிட்டது? திடீரென்று கங்கையை உவமையாக்கி என்னைப் புகழ்கிறீர்களே!”

“பைத்தியக்கார ஆசை ஒன்று என் நெஞ்சில் உதித்தது. அதைச் சொல்லலாமா, கூடாதா என்ற அச்சம் தோன்றுகிறது.”

“இவ்வளவு நாள் பழகியும் என்னிடம் சொல்வதற்கு என்ன தடை?”

“நான் எங்காவது சென்று தங்கினால் ஒரு வாரம் வரையில் என்னைப்பற்றி என் குடும்பத்தினர் அதிகமாகக் கவலைப்பட மாட்டார்கள். அதற்குப் பிறகு என் மனைவி ஒவ்வொரு நாளும் என் வரவை எதிர்நோக்கிக் கொண்டே இருப்பாள். வழிமேல் விழி வைத்துப் பார்த்து, வராவிட்டால் சிறிது சோர்வு அடைவாள்.”

“இப்போதே புறப்பட்டுப் போகவேண்டும் என்று சொல்லப் போகிறீர்களா?”

“இல்லை; இல்லை. என் ஆசையை அல்லவா சொல்ல வந்தேன்? நான் இங்கிருந்து ஒவ்வொரு முறையும் பரிசுப் பொருள்களையும் உணவுப் பண்டங்களையும் கொண்டு போகும்போது அவள் மிக்க ஆர்வத்தோடு அவற்றைப் பார்த்துப் பிரமிப்பை அடைவாள்; மன்னர் பெருமானை நன்றியறிவுடன் வாழ்த்துவாள். இவ்விடத்துப் பழக்கம் எனக்கு ஏற்பட்ட பிறகு ஒரு முறைக்கு ஒரு முறை நான் கொண்டு செல்லும் பொருள்கள் மிகுதியாவதை அவள் கண்டு களிக்கிறாள். இத்தகைய பொருட் குவியல்களை அவள் எங்கே பார்த்திருக்கிறாள்? இந்த முறை நான் திரும்பிப் போகும்போது அவள் வியப்பி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/70&oldid=1362643" இலிருந்து மீள்விக்கப்பட்டது