யானைப் பரிசில்
69
வெளிமானூரில் அந்நாட்டுச் சிற்றரசனுக்குரிய காவல் மரம் தக்க பாதுகாப்பில் இருந்தது. அதைச் சுற்றிக் காவலர் நின்றுகொண்டிருந்தனர். பெருஞ்சித்திரனார் யானையை ஓட்டிச் சென்று அந்தக் காவல் மரத்தில் கட்டும்படி செய்தார்; அவர் புலவராதலின் காவலாளர்கள் அவரைத் தடுக்கவில்லை, வெளிமான் வாழ்ந்திருந்த காலத்தில் அவர் அந்த ஊருக்கு வந்து பழகினவர் அல்லவா?
யானையைக் காவல் மரத்தில் கட்டிவிட்டு, பாகனை அங்கே நின்று பார்த்துக்கொள்ளுமாறு சொன்னார். அப்பால் அவர் நேரே அரசனுடைய மாளிகையிற் புகுந்தார். இளவெளிமான் ஓரிடத்தில் அமர்ந்திருந்தான். அவனைப் புலவர் அணுகினார்.
“நான் அளித்த பரிசில் வேண்டாம் என்று ஓடினீரே! மறுபடியும் ஏன் வந்தீர்? கிடைத்த மட்டும் லாபம் என்ற அறிவு இப்போது வந்துவிட்டதோ?” என்று அந்தப் பண்பிலி கேட்டான்.
புலவருக்கு வரும் போதே ஆத்திரம் இருந்தது. அவன் கூறியதைக் கேட்டவுடன் கோபம் மூண்டது.
“நான் உங்களிடம் பரிசில் வாங்க வரவில்லை. என்னைப் போன்றவர்களுக்கு உலகம் விரிந்திருக்கிறது, காப்பாற்றுவோர் பலர் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றேனே; அதை மெய்ப்பிக்க வந்திருக்கிறேன்” என்று அவர் சொன்னார்.
“உமக்கு இப்போது என்ன பாக்கியம் கிடைத்து விட்டது?” என்று அவன் அலட்சியமாகக் கேட்டான்.
“உலகத்தில் புலமை பெற்ற எங்களைப்போன்ற இரவலர் பலர் இருக்கிறார்கள். அவர்களை வரவேற்று உபசரித்துப் போற்றும் புரவலர்களும் பலர் இருக்-