பக்கம்:குமண வள்ளல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யானேப் பரிசில்

71

கிடந்தது. அதை மெல்லக் கையில் எடுத்துப் படித்தான்.

இரவலர் புரவலே நீயும் அல்ல:
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண்இனி, இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண் இனி; நின்ஊர்க்
கடிமரம் வருந்தத் தத்துயாம் பிணித்த
நெடுதல் யானைஎம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே.

[நீயும் இரவலர்களாகிய புலவர் முதலியவர்களைப் பாதுகாக்கும் தன்மை உடையாய் அல்லே; இரவலர்களும் உன்னேயன்றி வேறு புரவலர்கள் இல்லே என்று இருப்பவர்களும் அல்லர்; இப்போது இரவலர்கள் இருப்பதையும் பார்; இரவலர்க்கு ஈபவர்கள் இருப்பதையும் காண்பாயாக. உன் ஊரில் உள்ள காவல் மரத்தில் கொண்டு வந்து யாம் கட்டியிருக்கும் உயர்ந்த கல்ல யானே யாம் பெற்ற பரிசில்; விரைவான குதிரையுடைய அரசனே! நான் போகிறேன்.]

பாட்டைப் படிக்கப் படிக்க இளவெளிமானுக்குக் கோபமும், நாணமும், இரக்கமும் மாறி மாறி உண்டாயின. புலவருடைய பெருமைக்குமுன் மன்னன் பெருமை எம்மாத்திரம்? செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்புப் பெறுகிறவர்கள் புலவர்கள். அவர்கள் பெருமையை மன்னர்கள் அறிந்து போற்றினால் அவர்களால் புகழ் பெறுவார்கள். இல்லையானால் மணம் இல்லாத மலரைப்போல வாழ்வார்கள்.

இளவெளிமான் பின்பு, தன் காவல் மரத்தில் புலவர் யானையைக் கொண்டுவந்து கட்டியிருந்தார் என்ற செய்தியைக் காவலரும் கூறத் தெரிந்துகொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/77&oldid=1362694" இலிருந்து மீள்விக்கப்பட்டது