பக்கம்:குமண வள்ளல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

குமண வள்ளல்

திடீரென்று படையெடுத்து முற்றுகையிட்டால் இந்தப் புலவர்கள் ஏட்டையும் எழுத்தாணியையும் ஏந்திக் கொண்டு நமக்குப் போரில் வெற்றி வாங்கித் தரப் போர்க்களம் புகுவார்களா?"

இளங்குமணன் தன் வாதத்தை வளர்த்துக் கொண்டே போனான் குமணன் எதிர் பேசவில்லை. அவன் சொல்வனவற்றில் நியாயம் இருக்கிறதா, இல்லையா என்பதையும் சிந்தித்துப் பார்க்கவில்லை. 'கொடையையும் புலவரையும் இவன் விரும்பவில்லை. நம்மையும் விரும்பவில்லை' என்பது ஒன்றையே அவன் சிந்தித்தான். 'இனி இவன் நம்முடன் மனம் பொருந்தி வாழமாட்டான்' என்பதையும் தெரிந்துகொண்டான்.

"உனக்கு உள்ள கவலைகளை நான் ஒருவாறு உணர்ந்தேன். என்னுடைய செயல்கள் உன் மனத்துக்குப் பொருந்தவில்லை என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. நான் வறியவனாகிவிட்டால் நீயும் வறுமையால் வாட நேரும் என்ற அச்சம் உனக்கு உண்டாவது இயல்புதான். நான் எப்படிப் போனாலும் என்னைப்பற்றிய கவலை உனக்கு வேண்டியதில்லை. நீ சுகமாக வாழ வழி வகுக்கிறேன் ” என்று குமணன் சொன்னான். அவன் தன் மனத்தில் ஏதோ ஒன்று செய்ய முடிவு கட்டினான்.

"என்ன வழி வகுக்கப் போகிறாய்? என்னையும் பாட்டுப் பாடும் புலவனாக்கிவிடலாம் என்ற எண்ணமோ?" என்று சொல்லித் தன் இகழ்ச்சி தோன்றச் சிரித்தான் இளங்குமணன்.

"புலவர்கள் என்றால் உனக்கு ஏன் அப்பா அவ்வளவு இழிவாக இருக்கிறது? மன்னர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/82&oldid=1355347" இலிருந்து மீள்விக்கப்பட்டது