பக்கம்:குமண வள்ளல்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குமணன் அரசு துறத்தல்

77

புகழை நிலைநிறுத்தும் பெருமையுடையவர்கள் அவர்கள். இது உனக்குத் தெரியவில்லையே! அது கிடக்கட்டும். நீ என்னுடன் பிறந்தவன். நான் கெட்டுப் போவேன், அதோடு உனக்கும் கேடு வரும் என்ற அச்சம் உனக்குத் தோன்றியிருக்கிறது. நீ வறுமையை அடையாமல் உன்னைப் பாதுகாத்துக்கொண்டால் போதும் என்று நினைக்கிறேன். அதற்கு ஏற்ற வழி ஒன்று செய்ய எண்ணுகிறேன்."

"என்ன வழி?" என்று பரபரப்புடன் கேட்டான் இளங்குமணன்.

"உன்னைத் தனியாக வாழும்படி வகை செய்கிறேன்."

"புலவர்களுக்கு அவ்வப்போது பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்புவது போல எனக்கும் கொடுத்துத் தனியே இருக்கும்படி செய்யலாம் என்ற எண்ணமோ?"

"அதற்குள் அவசரப்படுகிறாயே! நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை நாளைக்குத் தெளிவாகச் சொல்கிறேன்" என்று அன்றைப் பேச்சைக் குமணன் அதனோடு நிறுத்தினான்.

அன்று இரவு முழுவதும் குமணனுக்குத் துாக்கமே வரவில்லை. சில காலமாகத் தன் தம்பி தன்னிடத்தில் மனம் மேவாமல் இருக்கிறான் என்பதை அவன் தெரிந்துகொண்டிருந்தான்.இப்போதுநேருக்கு நேரே அவன் தன் வெறுப்பைக் காட்டிக்கொண்டுவிட்டான். 'அவனை என்ன செய்வது? ஒறுப்பதா? தமையன் தன் தம்பிக்குத் தீங்கு இழைத்தான் என்று உலகம் பழிக்காதா? தான் சுகமாக வாழ வேண்டுமென்று அவன் விரும்புகிறான், அப்படி விரும்பும் உரிமை அவனுக்கு

6