பக்கம்:குமண வள்ளல்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

குமண வள்ளல்

"ஆசை யாரை விட்டது? அப்படிச் செய்யவும் கூடும்” என்று அவனுடைய நண்பன் ஒருவன் கூறினான்.

"தானே எல்லாவற்றையும் கொடுத்து விட்டுப் போனவன், திரும்பி வர எண்ணுவதற்கு இடம் இல்லை” என்றான் இளங்குமணன்.

"அப்படி எண்ணக்கூடாது. அந்தச் சமயத்தில் அவரிடம் போதிய படை இல்லை. போரிட்டால் நிச்சயமாகத் தோல்வி உண்டாகும் என்பதைத் தெரிந்துகொண்டார். போரில் ஒருகால் தாம் உயிர் இழந்தாலும் இழக்கலாம் என்ற அச்சமும் உண்டாகியிருக்கும். அதனால் தாமே வலியக் கொடுத்துவிட்டார். நெடுநாள் ஆட்சி புரிந்த பற்று விடுமா? காட்டில் இருந்தபடியே சூழ்ச்சி செய்து வேறு மன்னன் யாருடனுவது சேர்ந்துகொண்டு இந்த நாட்டின்மேற் படையெடுத்து வந்தாலும் வரலாம்." ...இப்படி ஒருவன் சொன்னான்.

அதைக் கேட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தான் இளங் குமணன்.

"அப்படியும் நடக்கலாம். அதற்கு ஏற்ற பாதுகாப்பை நாம் செய்துகொள்ளத்தான் வேண்டும்" என்று அவன் தெரிவித்ததை மற்ற நண்பர்கள் ஆதரித்தார்கள்.

"இந்த நாடு முழுவதும் தங்களுக்கு உரியதாகிவிட்ட பிறகு படையைப்பற்றிய கவனம் நமக்குக் குறைந்துவிட்டது. மீட்டும் நம் படைப்பலத்தை மிகுதியாக்கி, எந்தச் சமயத்தில் யார் எதிர்த்தாலும் போரிட ஆயத்தமாக இருக்க வேண்டும். நாட்டின் ஒரு பகுதியை ஆண்டபோதே, தங்கள் தமையனார்