பக்கம்:குமண வள்ளல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

குமண வள்ளல்

சோழ நாட்டில் ஆவூர் என்பது ஓரூர். அங்கே மூலங்கிழார் என்ற தமிழ்ப்புலவர் ஒருவர் வாழ்ந்தார். அவருடைய புதல்வராகிய பெருந்தலைச் சாத்தனார் என்பவரும் தமிழ்ப் புலமை உடையவரே. அவருடைய இயற்பெயர் சாத்தனார் என்பது. அவர் தலை சற்றே பெரிதாக இருந்தமையால் பெருந்தலைச் சாத்தனார் என்று அவரை வழங்கி வந்தனர். அவருடைய தந்தையார் இறந்துவிட்டார். சாத்தனாருக்குப் பெரிய குடும்பம். குடும்பத்தில் உள்ளவர்களைக் காப்பாற்ற இயலாமல் திண்டாடினர். வறுமைப் பிணியால் அவர் பட்ட வேதனை சொல்லும் தரம் அன்று.

அவர் எங்கே போனாலும் அவருடைய துரதிருஷ்டம் தொடர்ந்து சென்றது. கோடைக்கானலில் கடிய நெடுவேட்டுவன் என்ற ஒரு செல்வன் வாழ்ந்தான். அவனிடம் போய் ஏதாவது பெற்று வரலாம் என்று சாத்தனார் போனார். அவனை எளிதிலே காண முடியவில்லை. கண்டும் உடனே பரிசில் பெற இயலவில்லை. பல காலம் காத்திருந்த பிறகே அவன் கொடுத்ததைப் பெற்று வந்தார். கடற்கரையிலுள்ள ஊர் ஒன்றில் மூவன் என்ற உபகாரி வாழ்ந்திருந்தான். புலவர்களுக்கு உதவி புரிகிறவன் அவன் என்பதைக் கேள்வியுற்றார் பெருந்தலைச் சாத்தனார். அவன் நல்லவன் தான். ஆனாலும் அவர் சென்ற வேளை சரியாக இல்லை. அவனிடம் பரிசில் கிடைக்க நெடுங்காலம் ஆயிற்று. தம்முடைய கோபத்தைக் காட்டிப் பாடிய பிறகே அந்தப் பரிசிலும் கிடைத்தது. [1] மறுபடியும் அவர்களிடம் போக மனம் வருமா? மானம் உள்ளவ-


  1. புறநானூறு, 205. † புறநானூறு, 909
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/98&oldid=1362765" இலிருந்து மீள்விக்கப்பட்டது