பக்கம்:குமண வள்ளல்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாள் தந்த வளம்

93

 Invalid template invocation→ராகையால் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்று இருந்துவிட்டார்.

மானத்துக்கு முதல் பகை வறுமை என்பதை அவர் தம் வாழ்க்கையில் உணர்ந்தார். வறுமை மறுபடியும் அவரை முடுக்கித் துரத்தியது. எங்கே போவது? குமணன் புலவர்களை மதித்துக் கொடுப்பவன் என்று யாரோ சொன்னார்கள். சொன்னவருக்குக் குமணன் இப்போது எந்த நிலையில் இருக்கிறான் என்ற செய்தி தெரியாது. சோழ நாட்டளவும் இன்னும் குமணனுடைய காட்டு வாழ்க்கையைப் பற்றிய செய்தி எட்டவில்லை.

பெருந்தலைச் சாத்தனார் கொங்கு நாட்டை நோக்கிப் புறப்பட்டார். குமணனது நாட்டை அடைவதற்கு முன்பே அவன் காட்டில் மறைந்து வாழ்கிறான் என்று கேள்வியுற்றர். அவர் மனநிலை எப்படி இருக்கும்! ‘நம்முடைய ஊழ்வினையை நொந்துகொள்ளாமல் யாரை நோவது?’ என்று வருந்தினர். இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே. அவனைப் பார்த்துவிட்டாவது போகலாம். அவனைப் பெரிய வள்ளல் என்று பல பேர் சொன்னார்களே. அவன் காட்டில் வாழ்ந்தாலும் அங்கும் சில பொருள்களை வைத்திருந்தால் தானே வாழ முடியும்? நான் போய்க் கேட்கிறேன். நல்லவர்களிடம் எத்தனை கெஞ்சிக் கேட்டாலும் தவறு இல்லை. அவன் கொடுப்பதைக் கொடுக்கட்டும்; பெற்று வரலாம் என்று ஒரு நினைவு அவருக்கு உண்டாயிற்று. அவர் எவ்வளவோ இடங்களுக்குப் போய்ப் போய்ச் சலிப்படைந்தவர். இங்கும் சென்று பார்த்துவிடலாம் என்று எண்ணினர். ஒன்றும் இல்லை என்று சொல்லக்கூடும். அப்போது, போன-

7