பக்கம்:குமரப் பருவம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வளர்ச்சியில் வேகம்
9
        பத்து வயதுவரை ஆண் பெண்கள் சிறுவர் சிறுமிகளாகவே குழந்தைப் பருவத்தினராக இருக்கிறார்கள். பன்னிரண்டாவது வயது தொடங்கும்போது பார்த்தால் ஆண்களில் ஒரு சிலரே மலர்ச்சி யெய்தத் தொடங்கியிருப்பார்கள். ஆனால், பெண்களில் மிகப்பலர் மலர்ச்சியெய்தியிருப்பார்கள்.
        மலர்ச்சி பெறுகின்ற காலத்தில் உடல் வளர்ச்சியோடு வேறு சில மாறுதல்களும் நிகழ்கின்றன. குரல் மாறுபடுகிறது. குறியைச் சுற்றி உரோமம் முளைக்கத் தொடங்குகிறது. அதற்கு மலர்ச்சி ரோமம் என்று பெயர். அக்குளிலும், மேல் உதட்டிலும் உரோமம் காணத்தொடங்கும். உடல் வளர்ச்சியிலும் சில சமயங்களில் கை, கால் என்று இப்படி ஏதாவது ஒரு சில உறுப்புக்கள் மட்டும் மற்றவைகளைவிட வேகமாக வளர்வதுண்டு. குமரப் பருவம் முதிரும்போதுதான் எல்லா உறுப்புக்களும் அவற்றிற்கேற்ற விகிதத்தில் நன்றாக வளர்ந்து அமையும்.
        வயதைப் பொறுத்து இந்த வளர்ச்சியைக் கீழ்க்கண்டவாறு பொதுப்படையாகக் கூறலாம். சுமார் 11 அல்லது 12 வயதுவரை சிறுவர் சிறுமியர் அதிக வேறுபாடில்லாத ஒரே வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறார்கள். பிறகு திடீரென்று வளர்ச்சியிலே அதிக வேகம் தோன்றுகிறது. பெண்கள் ஆண்களைவிட ஒன்றிரண்டு ஆண்டு முன்னதாகவே அதாவது சுமார் 11 ஆம் வயதிலேயே வேகமாக வளரத் தொடங்குகிறார்கள். இந்த வேகமான வளர்ச்சி 14 வயது வரை நீடிக்கிறது. பிறகு இந்த வேகம் குறைந்து விடுகிறது. ஆண்களின் வளர்ச்சி 12 அல்லது 13 ஆம் வயதில் வேகமாகத் தொடங்கி 15 அல்லது 16 வரை நீடிக்கிறது.
         பொதுவாக உயரம் அதிகமாக உள்ளவன் இந்தப் பருவத்தில் மிக வேகமாக வளர்ந்து எல்லோரையும்விட,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/10&oldid=1230272" இலிருந்து மீள்விக்கப்பட்டது