பக்கம்:குமரப் பருவம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாளமில்லாச் சுரப்பிகள்
11
      இந்த அட்டவணையிலிருந்து 13, 14-ஆம் வயதில் ஆண்களில் பெரும்பலோர் மலர்ச்சி யெய்தத் தொடங்குகின்றனர் என்பதை அறிந்துகொள்ளலாம்.
      தென்னிந்தியா போன்ற வெப்ப நாடுகளில் பெரும்பாலான பெண்கள் 11, 12 வயதிலே பூப்பெய்தி விடுகிறார்கள். ஆனால் ஸ்காட்லாந்து, வட ஐரோப்பா போன்ற குளிர் நாடுகளில் 14, 15 வரை பெண்கள் சாதாரணமாகப் பூப்பெய்துவதில்லை. இதற்கு விதி விலக்கும் உண்டு. கிராமங்களிலே வசிப்பவர்களும், நன்கு உழைப்பவர்களும் விரைவில் பூப்பெய்துவதில்லை. பட்டணத்து நாகரிக வாழ்வும், பாலுணர்ச்சியைத் தூண்டும் சினிமாக் காட்சிகள், நூல்கள் முதலியனவும் பூப்பெய்து தலைத் துரிதப்படுத்துகின்றன என்று கூறினால் அதில் தவறொன்றும் இல்லை.
நாளமில்லாச் சுரப்பிகள்
       சிறுவன் மலர்ச்சி யெய்துகிறான்; சிறுமி மலர்ச்சி யெய்துகிறாள். ஆனால், அவர்கள் முதிர்ந்த ஆடவனாகவோ மங்கையாகவோ மாறிவிடவில்லை. அதற்கு இன்னும் காலம் போகவேண்டும். முதிர்ச்சி பெறுவதற்குத் தொடங்கியிருக்கிறார்கள் என்றுதான் மலர்ச்சி யெய்துதலுக்குப் பொருள் என்று முன்பே குறிப்பிட்டேன்.
       மலர்ச்சி யெய்துவதற்குச் சற்று முன்பும், மலர்ச்சி யெய்திய பின்பும் வளர்ச்சி வேகமாகத் தொடங்குகிறது என்றும் கூறினேன். உடல் வளர்ச்சி வேகமடைவதையும், ஆண்மைக்கும் பெண்மைக்கும் சிறப்பாக உரிய உறுப்புக்கள் வளர்ந்து மாறுதல்கள் தோன்றுவதையும் நாம் காண்கிறோம். குரல் மாறுதலடைகிறது; சிறுவனின்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/12&oldid=1230328" இலிருந்து மீள்விக்கப்பட்டது