பக்கம்:குமரப் பருவம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

குமரப் பருவம்
         இரவு ஸ்கலிதத்தால் உடல்பலம் குன்றிவிடும் என்றும் ஆண்மை குன்றிவிடும் என்றும் எண்ணுவதுண்டு. ஏதோ நோயினால் இவ்வாறு ஏற்படுகின்றது என்று நினைப்பவரும் உண்டு. இரவு ஸ்கலிதம் இந்த வயதிலே ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் என்று ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள்.
         பல்வேறு காரணங்களால் இரவு ஸ்கலிதம் ஏற்படலாம். காம நினைவு முக்கிய காரணம். அந்த நினைவால் ஏற்படும் கனவும் இதைத் தூண்டுகிறது. உறங்கும்போது படுத்திருக்கும் நிலையும் சில சமயங்களில் ஸ்கலிதத்திற்குக் காரணமாகும். வெப்பம் மிகும்படியாகப் போர்த்துக் கொண்டு தாங்குவதும் இதை உண்டாக்குகிறது. சிறுநீர் அதிகமாகச் சிறு நீரகத்திலே சேர்ந்திருப்பதும், மலச்சிக்கலும் வேறு சில காரணங்கள். இவற்றையெல்லாம் விலக்குவது நல்லது.
          விந்துச் சுரப்பிகளில் உண்டாகும் விந்து ஆணின் வளர்ச்சிக்கு உதவுகின்றது. அது வீணாகாமல் காத்து வருவது பிற்கால வாழ்க்கையின் சிறப்புக்கு நல்லதென்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். காம உணர்ச்சிகளைத் தூண்டும் விஷயங்களே அறவே ஒழித்து, எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனைகளும் கொண்டு பிரமசரியம் காக்க வேண்டும் என்று நம் முன்னோர் வகுத்துள்ளார்கள். இப்பருவத்திலே இரவு ஸ்கலிதம் ஏற்படுவது இயற்கை தான். அதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை என்று மருத்துவர்களும், மற்ற ஆராய்ச்சியாளர்களும் கூறுவதைக் கொண்டு இதைப்பற்றி அசட்டையாக இருக்க வேண்டுமென்பதில்லை. வீண் கலவரம் அடைய வேண்டுவதில்லை என்றுமட்டும் கொள்ளலாகும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/19&oldid=1230383" இலிருந்து மீள்விக்கப்பட்டது