பக்கம்:குமரப் பருவம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

குமரப் பருவம்

பதும் உண்டு. சூதகம்வெளியாகும்நாட்களும் வேறுபடும். ஏழுநாட்கள் வரையிலும் சூதகம் நிற்காமலிருப்பதுண்டு. தொடக்கத்தில் சில மாதவிடாய்களில் சூதகம் ஒரே நாளுடன் நிற்பதும் உண்டு.

         ஒரு மாதவிடாய்க்கும் அடுத்ததற்கும் இடையேயுள்ள நாட்கள் ஏறக்குறைய ஒழுங்காக அமைவதற்குப் பூப்பெய்தியபின் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆவதும் உண்டு. பதினெட்டு, பத்தொன்பது வயதாகும்போது பெரும்பாலும் இதில் ஒழுங்கு ஏற்பட்டுவிடும். ஆனால், முற்றிலும் ஒழுங்காக முதிர்ந்தோரிடத்திலும் மாதவிடாய் ஏற்படுவதில்லை.
         குமரப் பருவத்திலே மாதவிடாயில் ஒழுங்கு தவறுவது சாதாரணம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. மிகுந்த உடல் உழைப்பாலும்,நோயாலும், இப்பருவத்தில் ஏற்படும் பலவகை உள்ளக்கிளர்ச்சிக் கோளாறுகளாலும் மாதவிடாய் ஒழுங்குமாறும்; சீதோஷ்ண நிலைமையின் வேறுபாடும் இதற்குக் காரணமாவதுண்டு.
         பூப்பெய்திய தொடக்கத்தில் சில ஆண்டுகளுக்கு மாதவிடாயின்போது சில தொல்லைகள் ஏற்படலாம்; வலிகூட உண்டாவதுண்டு. இவ்வலி மிகுதியாக இருக்குமானால்தான் அதைப்பற்றிக் கவனிக்கவேண்டும். மற்றபடி உடம்புக்குத் தொல்லை ஓரளவு ஏற்படுவது இனப்பெருக்க உறுப்புக்கள் வளர்ச்சியுறும் பருவத்தில் இயல்புதான்.
         பூப்பெய்திய இளம்பெண்களுக்குச் சாதாரணமாக உண்டாகும் தொல்லைகள் தலைவலி, முதுகுவலி, வயிற்றுவலி போன்றவையாகும். வாந்தியெடுப்பதும், களைப்புண்டாவதும் உண்டு. குமரப் பருவம் முதிரமுதிர இந்தத் தொந்தரவுகள் குறைந்துபோகும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/21&oldid=1230406" இலிருந்து மீள்விக்கப்பட்டது