பக்கம்:குமரப் பருவம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடத்தையிலே மாறுபாடு 25 முன்னதாக நடத்தையிலே மாறுபாடு தெளிவாகக் காண்கிறது. இனப் பெருக்கத்திற்கு உதவும் உறுப்புக் களிலே வளர்ச்சி காணக் காணத் தோழர்களிடமிருந்து விலகித் தனித்திருக்க விருப்பம் ஏற்படுகிறது. எதிலுமே பற்றில்லாதிருத்தல், அமைதியின்மை, பிடிவாதமா யிருத்தல், மூர்க்கத்தனம், சோம்பல், சிடுமூஞ்சித்தனம் முதலானவற்றை அந்தச் சமயத்திலே காணலாம். பழைய தோழர்களும், விளையாட்டுக்களும் இப்பொழுது அவ்வளவாகப் பிடிப்பதில்லை. படிப்பதிலும், பகற் கனவு காண்பதிலும் அதிக நேரத்தைக் கழிக்க விருப்பம் உண்டாகிறது. மலர்ச்சி யெய்துமுன்பு ஆண்களுக்குப் பெண்களை அதிகமாகப் பிடிப்பதில்லை; பெண்களுக்கு ஆண்களைப் பிடிப்பதில்லை; வேற்றுப் பாலாரோடு சச்சரவு செய்து கொள்ளவும் தயங்குவதில்லை. இம்மாதிரி ஆண்களும் பெண்களும் நடந்து கொள்ளுவதோடு தங்களை மற்ற வர்கள் சரியானபடி நடத்தவில்லை யென்று குறைபட்டுக் கொள்ளும் தன்மையும் காணப்படுகிறது. மலர்ச்சி யெய்தப்போகும் பருவத்திலே பையன் களும் பெண்களும் தொட்டாற் சுருங்கிகளாய் விடுகின் றனர். எதற்கெடுத்தாலும் கோ. ப ம் வந்துவிடும். பிறருடைய வார்த்தைகளையும், நடத்தையையும் தப்பாக அர்த்தம் செய்து கொள்ளுவார்கள். அதன் காரணமாகப் பையன்கள் மூர்க்கத்தனமாக நடக்கத் தொடங்கு வார்கள். பெண்கள் குறை கூறுவதோடு நில்லாமல் கண்ணிரைத் தாரை தாரையாகப் பெருகச் செய்வார்கள். யாருமே தங்களை அன்போடு நடத்தவில்லை என்பதாக எண்ணிக்கொண்டும். எத்தனையோ து ன் பங் க ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/26&oldid=806551" இலிருந்து மீள்விக்கப்பட்டது