பக்கம்:குமரப் பருவம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடத்தையிலே மாறுபாடு 29 குழந்தைப் பருவத்திலேயே மூளை நன்கு வளரத் தொடங்குகிறது. மலர்ச்சி யெய்தும்போது அது பெரும் பாலும் முழு வளர்ச்சி பெற்றுவிடும். குழந்தைப் பருவத் திலே உடம்புக்கு அளவாகத் தலையிராமல் பெரிதாகத் தெரியும். மலர்ச்சிப் பருவத்தில் மற்ற உறுப்புக்கள் வேகமாக வளர்ந்து உடலும் தலையும் அளவாக இருக்கு மாறு அமைகின்றன. பிறக்கும்போதே மூளையில் உள்ள நரம்பணுக்களும், நரம்பு நார்களும் அநேகமாக வேண்டிய அளவு இருக் கின்றன; ஆனால், அவை தங்கள் கடைமைகளைச் செய்வ தற்கு வேண்டிய வளர்ச்சியைப் பெற்றிருப்பதில்லை. குழந்தைப் பருவத்திலிருந்தே அவற்றின் வளர்ச்சி தொடங்குகிறது. நரம்பணுக்கள் முதிர்ச்சி பெறுவதோடு நரம்பு நார்களால் ஒன்ருேடொன்று பல வகைகளிலே தொடர்பு கொள்ளுகின்றன. மலர்ச்சி யெய்துகின்ற பருவத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சி பெற்ற நரம்பணுக்களின் தொகை இரு மடங்காகி விடுகிறது. ஒன்ருேடொன்று ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பும் அதிகரிக்கிறது. தலையின் உச்சிப் பாகத்திலே பெரும் பகுதியாக அமைந்திருக்கும் மூளையிலே பல புதிய புதிய தொடர்புகள் குமரப் பருவத்திலே ஏற்படுகின்றன. அதன் காரணமாக மனத்திறமைகள் ஓங்குகின்றன. சிந்தன சக்தியும் அதிகரிக்கிறது. அதனால் இந்தப் பருவத்திலே மனத்தை அதிகமாகப் பயன்படுத்த வேண்டிய செயல்களிலேயும், கணிதப் புதிர்கள் போன்ற வற்றை விடுவிப்பதிலும் ஆர்வமும் மகிழ்ச்சியும் பிறக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/30&oldid=806561" இலிருந்து மீள்விக்கப்பட்டது