பக்கம்:குமரப் பருவம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள் ளக் கிளர்ச்சிகள் "வயகதான் பன்னிரண்டாகப் போ கி ற து: குழந்தைமாதிரி அழுகிறது இந்தப் பெண்' என்று தாய் சங்கடப்படுகிருள். "ஆமாம். எங்கள் வீட்டில் அந்தப் பையன் இருக் கிருனே அவனும் அப்படித்தான். எதற்கெடுத்தாலும் கோபித்துக்கொள்ளுகிருன். இத்தனை நாளாக அப்படி இல்லே' என்று பக்கத்து வீட்டு அம்மாளும் தனது கவலையைத் தெரிவிக்கிருள். மலர்ச்சி யெய்துகின்ற காலத்திலே குமரனும் குமரியும் தங்கள் உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடுவதிலே மறுபடியும் குழந்தைகள்போல நடந்துகொள்ளுகிருர்கள். குழந்தைக்குப் பயம் ஏற்பட்டால் அல்லது கோபம் வந்தால் அல்லது மகிழ்ச்சி பிறந்தால் அதை முழு வேகத் தோடு வெளிப்படுத்துகிறது. சிறு பயத்திற்கும் பெரும் பயத்திற்கும் இந்த வேகத்திலே வேறுபாடே இருக்காது. எந்த உள்ளக் கிளர்ச்சியும் முழு வேகத்தோடுதான் வெளிப்படும்; அதன் அளவுக்குத் தக்கவாறு அதிகமா கவோ, மிதமாகவோ, குறைவாகவோ வெளித் தோன்று வதில்லை. ஆனல், வயதேற ஏறக் குழந்தை தன் உள்ளக் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ளுகிறது. குழந்தைப் பருவம் தாண்டுவதற்குள் இந்தத் திறமை பெரும்பாலும் திருப்திகரமாக அமைந்துவிடும்; அதனல் பெற்ருேர்களுக்கும் மற்றவர்களுக்கும் ம கி ழ் ச் சி உண்டாகிறது. ஆனல், மலர்ச்சி யெய்துகின்ற காலத்திலே இந்தக் கட்டுப்படுத்தும் திறமை மறைந்து மறுபடியும் குழந்தை நிலை ஏற்படுகிறது. அதைக் கண்டுதான் மேலே கூறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/31&oldid=806563" இலிருந்து மீள்விக்கப்பட்டது