பக்கம்:குமரப் பருவம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளக் கிளர்ச்சிகள் 31 தாய்மார்கள் கவலையடைந்திருக்கிருர்கள். ஆ ைல், அவர்கள் அப்படி அதிகமாகக் கவலைப்பட வேண்டிய தில்லை. மலர்ச்சி யெய்திய தொடக்கத்திலிருக்கும் குமர னிடத்திலும் குமரியிடத்திலும் அவர்கள் சற்று அதிக மாகப் பரிவு காட்டவேண்டும். குமரனுக்கும் குமரிக்குமே பல சமயங்களில் தங்கள் நடத்தை பிடிக்காது; பின்னல் அதற்காக வருந்துவார்கள். குமரப் பருவம் முதிர முதிர மறுபடியும் அவர்களுக்குத் தங்கள் உள்ளக் கிளர்ச்சி களைக் கட்டுப் படுத்தும் திறமை பெரும்பாலும் அமைந்து விடும். அதுவரை அவர்களிடம் பரிவு காட்டத்தானே வேண்டும்? பயம், கோபம். பொருமை முதலான உள்ளக் கிளர்ச்சிகள் தோன்றில்ை குமரிகள் அழுது தீர்த்து விடுவார்கள்; மகிழ்ச்சி வந்துவிட்டால் ஒரே சிரிப்பும் இளிப்புமாக இருக்கும். இரண்டும் அளவு கடந்து போகும். குமரனுக்கு மகிழ்ச்சி வந்துவிட்டால் தலைகால் தெரியாது என்கிருர்களே அப்படிக் குதிப்பான். முகத்திலே மகிழ்ச்சி தாண்டவமாடும். மனத்திற்கு ஏதாவது பிடிக்கவில்லை என்ருலோ முகத்தை உம்’ என்று வைத்துக்கொள்ளுவான்; சரியாகப் பேசமாட் டான் சொன்னதைச் செய்யமாட்டான்; ஏண்டா இப்படி யிருக்கிருய்?' என்று கேட்டால் மெளனம் சாதிப் பான் இல்லாவிட்டால் ஏதாவது முனு முணுத்துக் கொண்டு போவான். குமரப் பருவம் முதிரத் தொடங்கும்போது இம் மாதிரி உள்ளக் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்த அப் பருவத் தினர் முயல்வார்கள். அப்படி முயலுவதால் சில சமயங் களில் அவை உள்ளுக்குள்ளேயே பல நாள் கனல் வீசிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/32&oldid=806567" இலிருந்து மீள்விக்கப்பட்டது