பக்கம்:குமரப் பருவம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 குமரப் பருவம் கொண்டிருக்கத் தொடங்கும். குந்தையின் உள்ளக் கிளர்ச்சிஅப்படியே வெகு நேரம் நீடித்திராது. மலர்ச்சி யெய்திய தொடக்க நிலையில் உள்ளவரிடத்தும் அது நீடிப்பதில்லை. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனே வெளிப்படுத்தி விடுவதால் அது குமுறி வழிந்து மறைந்து விடுகிறது. குமரப் பருவம் முதிரும்போது இதை கட்டுப் படுத்த முயலுவதில்தான் உள்ளக் கிளர்ச்சி உள்ளுக்குள் ளேயே நீண்ட காலத்திற்குக் கனல் விடுகிறது. அதனல், உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்றுகூட என்னும் படி சில சமயங்களிலே எண்ணம் ஏற்படுகிறது. உள்ளுக் குள்ளேயே குமைந்து சாம்புவது ஆண்களிடத்தில் விடப் பெண்களிடத்திலே அதிகமாகக் காணப்படும். குழந்தைப் பருவத்தின் கடைசிப் பகுதியிலே தோழர் களுடைய கூட்டத்தின்மேல் பற்றுதல் அதிகமாக இருக்கும். குமரப் பருவம் முதிர முதிர இந்தப் பற்றுதல் குறையைத் தொடங்கித் தன்னைப் பற்றிய பெருமை, தனது வெற்றிகளிலே பெருமை, குடும்பப் பெருமை என்றிப்படி மாறுகின்றது. கலை யார்வம், அழகிலே நாட்டம், அன்பு, மற்றவர் களின் உணர்ச்சிகளுக்குப் பரிவு காட்டல் முதலான தன்மைகளெல்லாம் குமரப் பருவத்தின் முதிர்ச்சியிலே தோன்றுகின்றன. இலட்சியங்களிலே ஆ ர் வ. மு. ம் இப்பொழுது அதிகமாகும். சில சமயங்களிலே இந்த ஆர்வம் ஒரு வெறி போலக்கூட மாறிவிடும். குமரப் பருவத்திலே இவ்வாறு உள்ளக் சிளர்ச்சி களில் குமுறல்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அப்பருவத்திலே ஏற்படும் பலவகைப்பட்ட மாறுதல்களே யாகும். அக்காலத்திலே ஏற்படும் உடல் வளர்ச்சி முதலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/33&oldid=806569" இலிருந்து மீள்விக்கப்பட்டது