பக்கம்:குமரப் பருவம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* يختبر அச்சம் முதலிய கிளர்ச்சிகள் உலகத்திலே பிறக்கும்போது குழத்தைக்கு ஒன் றிரண்டு வகையான பயந்தான் உண்டெனறு சொல்லுகி முர்கள். பெரியஓசையைக் கேட்டால்குழந்தை பயப்படும்: கீழே விழுவதுபோலத் தோன்றினல் பயப்படும். இவற் றைத் தவிர மற்ற வகையான பயங்களெல்லாம் பின்னல் ஏற்படுபவை என்று மனத்தத்துவர்கள் கூறுகிரு.ர்கள். ஆதலால் அவையெல்லாம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க முடியாது. சில குழந்தைகள் நாயைக் கண்டால் பயப்படுகின்றன. சில குழந்தைகளுக்கு நாயென்ருல் மிகவும் விருப்பம், அதைக் கண்டு அஞ்சமாட்டா. இம் மாதிரி பயங்களெல்லாம் அநுபவத்தையும் வளர்ப்பு முறையையும் பொறுத்திருக்கின்றன. குழந்தைகளுக்குப் பிராணிகளிடத்திலும், சுற்றுப் புறத்தில் உள்ள மற்றப் பொருள்களிடத்திலும் ஏற்படும் பய உணர்ச்சிகள் வயதா. க ஆகப் பொதுவாகக் குறையும். சில பய உணர்ச்சிகள் குமரப் பருவத்திலும், வாழ்க்கை முழுதுங்கூட நீங்காமல் இருப்பதும் உண்டு. ஆனால், இருட்டுப் பயம் போன்றவை அதிகரிக்கின்றன. குமரப் பருவத்திலே பலவகையான புதிய பய உணர்ச்சிகளும் உண்டாகின்றன. குழந்தைப் பருவப் பய உணர்ச்சி களுக்கும் இவற்றிற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. குழந்தை தன் எதிரிலே தோன்றும் காரணங்களாலேயே பயமடைகின்றது; ஆல்ை குமரன் தான் கற்பனைசெய்து கொள்ளும். காரணங்களாலும் அஞ்சி நலிகின்ருன். குமரன் தான் படிக்கும் பள்ளிக்கூடத்தில் மானவர் கழகத்தில் எல்லோருக்கும் முன்ல்ை முதல் தடவையாக நின்று அடுத்த வாரத்திலே ஒரு சொற்பொழிவு நிகழ்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/35&oldid=806573" இலிருந்து மீள்விக்கப்பட்டது