பக்கம்:குமரப் பருவம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சம் முதலிய கிளர்ச்சிகள 35 வேண்டுமானல் அவன் அதைப்பற்றி இப்பொழுதிருந்தே பயப்பட்டுக் கொண்டிருப்பான். குழந்தைக்கு அப்படிப் பட்ட பயம் தோன்முது. தன்னைப்பற்றிப் பிறர் உயர்வாகக் கருத வேண்டும் என்றும், எல்லோருக்கும் முன்னல் தான் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்றும் குமரன் கவலைப்படுகிருன். நாணம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது. குமரப் பருவத்தில் இருக்கும் அச்சங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 1. நாய், பாம்பு முதலான பிராணிகளிடத்தும், இடி, மழை, சாதாரணமாகக் கேட்டிராத புதுமா திரியான ஒலி, நெருப்பு, நீர் முதலானவைகளிடத்தும் பயப் படுதல். 2. மற்றவர்களிடம் பழகுதல், திறமையோ, பேச்சுச் சாதுரியமோ, வேறு வகைகளில் முக்கியத் துவமோ உடையவர்களோடிருத்தல், தனித்திருத்தல், கூட்டத்திலிருத்தல், பலர் முன் பேசுதல், வேற்றுப் பாலார்களே அதிகமாகவுள்ள இடத்திலிருத்தல், முதிர்ந் தவர்களே மிகுந்துள்ள இடத்திலிருத்தல் ஆகிய சமூகத் தொடர்பால் வரும் சந்தர்ப்பங்களில் பயமடைதல், 3. வறுமை, சாவு, நோய், பரீட்சையில் தேர்ச்சி பெருமை, செல்வாக்கிழத்தல், தொழிலில் வெற்றி பெருமை. வேற்றுப்பாலார்களிடம் திருப்திகரமாக நடக்க இயலாமை, பெற்றேர்களுக்கு வேதனை உன் டாக்கல் ஆகியவற்றை எண்ணிப் பயப்படுதல். குமரப் பருவம் முதிர முதிரச் சமூகத் தொடர்பு சம்பந்தமான பயங்களும், வெற்றி தோல்வி பற்றிய பயங்களும், வேற்றுப்பாலாருடன் ஏற்படும் தொடர்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/36&oldid=806575" இலிருந்து மீள்விக்கப்பட்டது