பக்கம்:குமரப் பருவம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 குமரப் பருவம் சம்பந்தமான பயங்களுமே ஓங்குகின்றன. இவைகளுங் கூடக் குமரப் பருவத்தின் இறுதியில் குறைய வேண்டும். இயற்கை நிகழ்ச்சி பற்றிய பயங்களும், உயிர்ப் பொருள் களைப் பற்றிய பயங்களும் பெரும்பாலும் நீங்கிவிட வேண்டும். இவற்றைப் போக்கக் குமரப் பருவத்தில் கிடைத்த வாய்ப்புக்களும், அவற்றைச் சரிவரப் பயன் படுத்திக்கொண்ட முறைகளுமே சா த ன ங் க ளாக அமையும். இவைகள் குறைகின்ற அளவிற்குக் குமரனும் குமரியும் வாழ்க்கையிலே உயர்வும் வெற்றியும்'இன்பமும் பெறத் தகுதி வாய்ந்தவர்களாகிருர்கள். இவை ஓரளவு குறையத் தொடங்கினலும் ஒரு சில அச்சங்கள் வாழ்க்கை முழுவதும் இருந்துகொண்டே யிருக்கின்றன. தனக்குப் போதிய திறமையில்லையே என்ற அச்சம், தானே கற்பனை செய்துகொள்ளும் அச்சம் ஆகியவை அப்படித் தொடர்ந்து நிற்கின்றன. குமரப் பருவத்திற்கே முக்கியமாக உரித்தான சில கவலைகளும் தொல்லை கொடுக்கத்தொடங்கும். தோற்றம் நன்ருக இருக்க வேண்டுமென்று கவலை வருகிறது. படிப்பிலே சிறப்படைய வேண்டுமே என்றும் கவலை. வயது ஏற ஏறத் திருமண விஷயமாகக் கவலே வந்து விடுகிறது. இக்கவலைகளெல்லாம் அச்சத்திற்கும் காரண மாகின்றன. இளங் குழந்தைக்குக் கோபம் வந்தால் வீரிட்டு அழும்; கீழே விழுந்து புரளும். கடிப்பதும் உண்டு. அடிப் பதும் உண்டு. ஆனல் குமரப் பருவத்திலே கோபம் வந்தாலும் இம்மாதிரி நடத்தை பெரும்பாலும் இராது. வசவுச் சொற்களைப் பயன்படுத்திக் குத்தலாகப் பேசுவது, சாமான்களை வீசி எறிவது என்று இப்படிக் குமரப் பருவத்திலே கோபம் வெளிப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/37&oldid=806576" இலிருந்து மீள்விக்கப்பட்டது