பக்கம்:குமரப் பருவம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்ச்சி விரிவு பிறந்த குழந்தை சுயநலமே உருவானது என்று சொல்லலாம். அதற்குத் தன்னைப்பற்றியேதான் எண்ண மெல்லாம். பின்னல் அது தன் தாயிடம் அன்பு கொள்ளு கிறது; தன்னருகிலே உள்ள மற்றவர்களிடம் அன்பு கொள்ளத் தொடங்குகிறது. இருந்தாலும் தனது நலமே அதற்குப் பெரிது. வயது ஆக ஆகக் குழந்தையின் விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது. தன்னையொத்த சிறுவர் களிடம் சேர்ந்து விளையாடுதல், பழகுதல், அவர்க ளுடைய இன்பத்தையும் கவனிக்க வேண்டுமென்று எண்ணுதல் என்று இவ்வாறு சமூகத்தில் சேர்ந்து வாழும் உணர்ச்சி வளர்கிறது. தோழர்கள் தன்னைப் புறக்கணிக்கக்கூடாது என்ற ஆர்வமும் பிறப்பதால் அவர்களுக்குப் பிரியமுண்டாகும் படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் குழந்தை தெரிந்துகொள்ளுகிறது. பத்து வயதுச் சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ தனது விளையாட்டுக் கூட்டத்தினிடத்தே பற்றுதல் அதிக மாக இருக்கிறது. ஆனால், அந்தப் பருவத்திலே பொது வாகப் பையன்கள் மற்றப் பையன்களுடைய தோழமை யிலும், பெண்கள் மற்றப் பெண்களின் தோழமையிலுமே ஆர்வம் காட்டுவார்கள். இருபாலாரும் சேர்ந்து விளை யாடுவதோ அல்லது பழகுவதோ அதிகமாக இராது. குமரப் பருவத்திலே இந்தச் சமூகப் பழக்கமும் நடத் தையும் இன்னும் விரிவடைகிறது. வேற்றுப்பாலாரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/39&oldid=806581" இலிருந்து மீள்விக்கப்பட்டது