பக்கம்:குமரப் பருவம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்ச்சி விரிவு 39 தோழமையிலே மெதுவாக ஆசை பிறக்கிறது. ஆழ்ந்த நட்பு அந்தப் பருவத்திலே ஏற்படுகிறது. முன்னல் பழகிய தோழர் தோழிகளின் கூட்டத்திலே இப்பொழுது அதிக நாட்டமிருப்பதில்லை. அப்படி யிருந்தாலும் அது தனிப்பட்டவரின் மேலுள்ள அன்பாகவே மாறியிருக்கும். இப் பருவத்திலே அறிவு வளர்ச்சி ஏற்படுவதாலும் நடத்தையிலே பல புதிய மாறுதல்கள் ஏற்படத்தொடங் குகின்றன. படிக்கும் நூல்கள், பத்திரிகைகள், பார்க்கும் சினிமாக்கள், நாடகங்கள், கேட்கும் சொற்பொழிவுகள் முதலியனவெல்லாம் இப் பருவத்தினரின் மேல் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ தமது செல்வாக்கைச் செலுத்தத் தொடங்குகின்றன. கிணற்றிலே விழுந்த ஒரு சிறிய கல்லால் உண்டா கின்ற அலைவட்டமானது எப்படி விரிவடைந்துகொண்டே போகிறதோ அப்படி ஒருவனுடைய விருப்பங்களும், எண்ணங்களும், அநுபவங்களும், விரிந்துகொண்டே போகின்றன. அவற்றிற்கு ஏற்றவாறு நடத்தையும் மாறி அமைகின்றது. இம்மாதிரி அன்பு விரிவடைவதும், நடத்தை மாறு வதும் திடீரென்று ஏற்படுவனவல்ல. குழந்தைப்பருவத்தி லிருந்தே சிறிது சிறிதாக இவை ஏற்படுகின்றன. அவற் றிற்குச் சாதகமான சூழ்நிலையிருந்தால் விரும்பத் தகுந்த முறையிலே நன்ருக அவை விரிவடையும்; இல்லையேல் வாழ்க்கையிலே துழையும்போது சிரமம் ஏற்படுகின்றது; நம்பிக்கை குறைகிறது: எதிலும் பின் வாங்கி நிற்கும் மனப்பான்மை தோன்றுகிறது. இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. குமரப் பருவத்திலே உண்டாகின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/40&oldid=806585" இலிருந்து மீள்விக்கப்பட்டது