பக்கம்:குமரப் பருவம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 குமரப் பருவம் வார்கள். தமது நண்பர்களுக்குத் தங்கள் வீடு பிடித்தமாக இருக்க வேண்டுமென்று ஆசை உண்டாகும். தாங்கள் மற்றவர்கள் வீடுகளுக்குப் போகும்போது அ ந் த வீடுகளையும் தங்கள் வீடுகளையும் மனத்திற்குள்ளேயே ஒத்திட்டுப் பார்த்துக் கொள்வார்கள். சீர்திருத்தத்திலே அவர்கட்கு ஆர்வம் அதிகம். அதனல் குறை சொல்லுவதோடு விடாமல் மாறுதல் செய்வதற்கு வேண்டிய தங்கள் கருத்துக்களையும் கூறத் தயங்கமாட்டார்கள். எதிலும் நிறைவு காண வேண்டுமென்று அவர்கள் துடிக்கிருர்கள். பெற்ருேர்களோ, நண்பர்களோ குறை யுடையவர்களாகத் தென்பட்டால் அவர்கள் உள்ளம் வருந்துகிறது. ஏமாற்றம் உண்டாகிறது. அவற்றின் காரணமாக மனத்தாங்கலும் பிரிவும் ஏற்படுவதுண்டு. தங்களுக்கே அவர்கள் உயர்ந்த குறிக்கோள்களை வகுத்துக் கொண்டு அவற்றைப் பின்பற்றுவதில் தவறினல் வருந்து வார்கள். அவர்களுடைய மனச் சான்றே அவர்களை வருத்தும். அதுவும் உள்ள்க் கிளர்ச்சிகளுக்குக் காரண மாகின்றது. வாழ்க்கையிலே கடைப்பிடிக்கவேண்டிய நல்லொழுக் கங்கள் வளர்ப்பு முறையாலும், சூழ்நிலையாலுமே முக்கியமாக அமைகின்றன, பிறப்பிலேயே கிடைத்த பாரம்பரியத் தன்மையும் காரணமாக இருக்கும்; ஆனல் அது சூழ்நிலையால் மாறுபாடடைகிறது. வீட்டு நிலைமை, சுற்றுப்புறங்கள், தோழர்களின் தன்மை இவையெல்லாம் ஒழுக்கத்தைப் பெரும்பாலும் அமைக்கின்றன. குமரப் பருவத்திலே ஒழுக்கம், சீலம் என்பவற்றைப் பற்றிய குழந்தைப் பருவ எண்ணங்கள் அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/47&oldid=806597" இலிருந்து மீள்விக்கப்பட்டது