பக்கம்:குமரப் பருவம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 குமரப் பருவம் தினர் எதையும் ஆய்ந்து பார்க்கத் தொடங்குகிரு.ர்கள். குழந்தைப் பருவக் கட்டுப்பாடுகள் பல இப்போது அவர் களுக்குப் பொருளற்றவையாகத் தோன்றுகின்றன. அவற்றை , மாற்றியமைக்கவேண்டும். மேலும் கட்டுப் பாடுகளே அமல் நடத்தும் முறையிலும் மாறுதல் வேண்டும். குமரப் பருவத்தினர் தாயிடமோ தந்தையிடமோ தமது உள்ளக் கிளர்ச்சிகளைப்பற்றியும் சிந்தனைகளைப் பற்றியும் தாராளமாகப் பேசும்படியாக அவர்களுக் குள்ளே நம்பிக்கையும் வளர்ந்திருக்க வேண்டும். எதைப் பற்றியும் தாய் அல்லது தந்தையிடம் பேசலாம்; பரிவோடு நல்ல ஆலோசனைகளை அவர் கூறுவார் என்று அவர்கள் நிச்சயமாக நினைக்கும்படி உறவு வளர்ந்திருக்கவேண்டும். அந்த நிலையிலே கட்டுப்பாடுகள் எல்லாம் தாமே ஏற்படுத்திக்கொண்ட நல்ல ஒழுங்கு முறைகளாகத்தான் தோன்றும். கு ம ர ப் பருவத்தினர் மகிழ்ச்சியோடு அவற்றைக் கைக்கொள்வார்கள். குழந்தைகள் தவறு செய்யும்போது பெற்ருேர்கள் அவைகளைத் திட்டுகிரு.ர்கள்: அடிக்கவும் செய்கிரு.ர்கள். கோபத்தினல் செய்யும் இந்தச் செயல்களால் அதிக நன்மை இல்லை. குழந்தைக்குப் புரியும்படி நிதானமாக அவைகளுக்கு எடுத்துக் கூறிப் பிறகு சிறு தண்டனை கொடுத்தாலும் அதல்ை பலன் ஏற்படலாம். இருந் தாலும் தண்டனையே இல்லதவாறு தவறுகளைக் களையச் செய்வதுதான் சிறந்த முறையாகும். குமரப் பருவத்திலே இந்த முறையைப் பின்பற்றுவது இன்னும் முக்கியமாகும். இப் பருவத்தினரின் தவறு களுக்காக வசவு வார்த்தைகளைப் பயன் படுத்துவது சாதாரணமாக நடக்கிறது; அடிப்பதுகூட உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/49&oldid=806599" இலிருந்து மீள்விக்கப்பட்டது