பக்கம்:குமரப் பருவம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பாடும் தண்டனையும் 49 இரண்டும் தவறு என்பது என்னுடைய கருத்து. தொடக்கத்திலிருந்து வளர்ப்பு முறை சரியானபடி அமைந்திருந்தால் இவற்றிற்குத் தேவையே ஏற்படா. மேலே கூறியுள்ளவாறு உள்ளத்தைத் திறந்து காட் டக்கூடிய அளவு உறவு வளர்ந்திருந்தாலும் தண்ட னேக்கு இடமிருக்காது. தமக்குக் கிடைத்த தண்டனை நியாயமானதல்ல என்று இப் பருவத்தினர் எண்ணுவாராளுல் அத் தண்டனையால் தீமையே விளையும். பெற்ருே.ரிடம் இருந்த உள்ளத் தொடர்பும் குறைந்து போகும். குமரப் பருவத்தின் தொடக்கத்திற்குச் சற்று முன்னும் பின்னும் சிறு குற்றங்கள், குறும்புகள் செய்வது இயல்பு. பையன்கள் 10 அல்லது 11 வயதிலிருந்து 14 வயது வரை அதிகமாகக் குறும்பு செய்வதாக ஆராய்ந்து முடிவு கட்டியிருக்கிருர்கள். அதற்குப் பிறகு குறும்புகள், குறைந்து வருவதாகவும் கண்டிருக்கிருர்கள். பெண்களும் பெரும்பாலும் இதே வயதில்தான் அதிகமாகக் குறும்பு செய்தாலும் பையன்களின் அளவுக்குப் போகமாட் டார்கள். துடுக்காகப் பேசுதல், சிடுமூஞ்சித்தனம் இவைகள்தான் அவர்களிடம் அந்தப் பருவத்திலே மிகுதியாகக் காணப்படும். சிறு குற்றங்கள். குறும்புகளைப்பற்றியே இதுவரை கவனித்தோம். திருடுதல், வீட்டை விட்டு ஓடிப் போதல், அடங்கி நடக்காமை, ஆண் பெண் உறவிலே தவறு செய்தல் முதலான பெருங் குற்றங்களைப்பற்றி இனி ஆராய்வோம். இம்மாதிரி பெருங் குற்றங்களுக்குச் சூழ்நிலையே முக்கிய காரணம் என்று இப்பொழுது கருதுகிருர்கள். 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/50&oldid=806603" இலிருந்து மீள்விக்கப்பட்டது