பக்கம்:குமரப் பருவம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய கிள ர்ச்சிகள் சிறு குழந்தைகள் எல்லோருமாகக் கூடி விளையாடு கிரு.ர்கள். ஆண், பெண் என்ற வேறுபாடு அப்பொழுது அதிகமாகத் தோன்றுவதில்லை. ஆனல் பத்து வயதிலே பார்த்தால் சிறுவர்கள் தனித்து விளையாடுவார்கள்: சிறுமிகள் தனித்து விளையாடுவார்கள். சேர்ந்து விளையாட அவர்கள் விரும்புவதில்லை. பருவமெய்து வதற்கு முன்பு சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் வேற்றுப் பாலாரிடம் தோழமை உணர்ச்சி அதிகமாக ஏற்படுவ தில்லை. இனப் பெருக்க உறுப்புக்கள் முதிர்ச்சி பெற்ற குமரப் பருவத்திலேதான் ஆண் பெண்களுக்கிடையே பற்றுதல் வளரத் தொடங்குகிறது. இயல்பான நல்ல வாழ்க்கை வாழ்ந்து வரும்போதும், வீட்டிலேயும் பள்ளியிலும் மற்ற இடங்களிலும் ஆரோக் கியமான நல்ல சூழ்நிலை இருக்கும்போதும் இந்த ஆண் பெண் பற்றுதல் நல்ல முறையிலே உரிய காலத்தில் மலரத் தொடங்கும். குமரப் பருவத்தினரிடையே விரும்பத்தகாத உள்ளக் கிளர்ச்சிகளும், கிளர்ச்சிப் போராட்டங்களும் ஏற்படா. ஆனல் இக்கால நாகரிக வாழ்வில் இப்படிப்பட்ட இயல்பான வ ள ர் ச் சி பாதிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். குழந்தைப் பருவத்திலிருந்தே உடல் சம்மந்தமான இன்ப உணர்ச்சி ஏற்படுகிறதென்று கூறுகிரு.ர்கள். பிறவியிலேயே மனிதனைத் துண்டும்படியான வலிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/52&oldid=806607" இலிருந்து மீள்விக்கப்பட்டது