பக்கம்:குமரப் பருவம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 குமரப் பருவம் கல்விப் பயிற்சி முடிந்து மனைவாழ்க்கையிற் புகும் வரை எளிய வாழ்க்கை வாழ்ந்து பிரமச்சரியம் காக்க வேண்டுமென்ற் நம் முன்னேர்கள் வகுத்துள்ளார்கள். உடலிச்சையைத் துாண்டும்படியாக அப்பருவத்திலே எதுவும் இருக்கக் கூடாது என்று அவ்ர்கள் கூறியுள் ளார்கள், உணவில்கூட இதைக் கவனிக்கும்படி திட்டமிட் டிருக்கிருர்கள். எளிய வாழ்க்கை, தூய எண்ணங்கள், உயர்ந்த இலட்சியங்களுக்கேற்றவாறு படிப்பு என்றெல் லாம் ஏற்படுத்தியிருக்கிரு.ர்கள். இன்றைய வாழ்க்கை முறையிலே பாலுந்தலை விரைவிலே தூண்டக்கூடிய பல காரணங்களிருக்கின்றன. பார்ப்பவரையும் படிப்பவரையும் கவரும் முக்கிய சாதன மாகக் காம உணர்ச்சியையே கொண்டு வெளியாகும் பல திறப்பட்ட சினிமாக் காட்சிகள், பத்திரிகைகள். ஒவி யங்கள், சுவரொட்டி விளம்பரங்கள் முதலானவை எங்கும் மலிந்திருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து வருபவை களின் கவர்ச்சியைக் கண்டே உள்நாட்டிலும் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் முக்கியமாக உண் டாகின்றது என்றும் கூறலாம். மேல்நாட்டுச் சமூக அமைப்பிற்கும் வாழ்க்கை முறைக்கும், நம் நாட்டில் உள்ளவற்றிற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகள்கூட இந்த எண்ணத்தை மாற்றக்கூடிய வலிமை பெற்றிருக்க வில்லை. ஆராய்ந்து பார்த்தால் மேல் நாட்டு அமைப்பு நம் நாட்டு அமைப்பை இன்று பெரியதோர் அள விற்கு மாற்றக்கூடிய காரியத்தைச் செய்து வருவதை உணரலாம். கல்வி முறை, உணவு முறை, இன்றைய பரபரப்பு மிகுந்த வாழ்க்கை முறை எல்லாம் பாலுந்தலை விரைவில் தூண்டுவதற்கு மறைமுகமாகவேனும் உதவியாக இருப் பதையும் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/55&oldid=806613" இலிருந்து மீள்விக்கப்பட்டது