பக்கம்:குமரப் பருவம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய கிளர்ச்சிகள் 55 சுகாதாரம் என்கிறபோதும் இதுவரையில் வெளி சுகாதாரம், உடம்பைப் பற்றிய சுகாதாரம் ஆகிய வற்றையே முக்கியமாக மக்கள் நினைத்துக்கொண்டிருந் தார்கள். மனச் சுகாதாரம் என்கிற துறையின் முக்கி யத்தை இன்று அதிகமாக உணர்ந்து வருகிருர்கள். பழைய காலத்தில் நம் நாட்டில் இருந்த கல்வி முறை யிலும், வாழ்க்கை முறையிலும் இது அடிப்படையாக இருந்து வந்திருக்கிறது. உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு ( வ ண் டி ய அறிவையும், வாழ்க்கை முறையையும் அமைக்க வேண்டியது வாழ்க் கையைப் பூரணமாக நடத்துவதற்கும் அனுபவிப்பதற்கும் இன்றியமையாததாகும். அதற்கு உள்ளக் கிளர்ச்சிகள் பற்றியும், பாலுந்தல்போன்ற இயற்கை உந்தல்களைப்பற் றியும், உடல், உள்ளவளர்ச்சியைப்பற்றியும், பருவத்திற்கு ஏற்றவாறு தோன்றும் மாறுபாடுகள் பற்றியும் விஞ்ஞான முறையில் தெளிந்த அறிவைப் புகட்டுவது அவசியமாகும். ஆண் பெண் உறவு பற்றியும் அறிவுறுத்தாமல் மறை பொருளாக வைத்திருப்பதே அவற்றைப்பற்றி இரகசிய மாகவும் தவருன வழிகளிலும் தெரிந்து கொள்வதற்குக் காரணமாகிறது என்று பெரும்பாலும் இன்று அறிஞர்கள் கருதுகிருர்கள். இவற்றைப்பற்றி அறிவு புகட்டுவதே பாலுந்தலை விரைவில் தூண்டும் என்றும் அதனால் அது விரும்பத்தக்கதல்ல என்றும் எண்ணுபவர்கள் உண்டு. இருந்தாலும் அந்த எண்ணம் இப்பொழுது வலிமை குறைந்து வருகிறது. முதிர்ந்த பருவத்து வாழ்க்கை தான் ஒருவனுடைய ஆயுட்காலத்திலே சாதாரணமாக மிக நீண்ட கால மாகும். இது குமரப் பருவத்திற்கு அடுத்த பருவம். முதுமைப் பருவம்வரை நீண்டிருப்பது. குழந்தைப் பருவமும் குமரப் பருவமும் அதற்கேற்ற அடி நிலைகளாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/56&oldid=806615" இலிருந்து மீள்விக்கப்பட்டது