பக்கம்:குமரப் பருவம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 குமரப் பருவம் அமைகின்றன என்று கூறலாம். அந்த அடிநிலை நன்கு அமைந்தால் முதிர்ந்த பருவத்து வாழ்க்கையும் நன்கு அமைந்துவிடும். ஆதலால் குழந்தைப் பருவமும், குமரப் பருவமும் வாழ்க்கையில் வெற்றிக்கும் இன்பத்திற்கும் மிக முக்கியமானவை என்று ஏற்படுகிறது. பொதுவாக ஐந்து வயதிற்குள்ளேயே ஒருவனுடைய வாழ்க்கை அமைப்பு முழுவதும் அரும்புபோல உருவாகி விடுகிறது என்று மனத் தத்துவர்கள் கூறுகிருர்கள். அந்த அரும்புக்குப் புறம்பானதோர் வாழ்க்கை மலர்ச்சி யில்லை என்றும் கூறுகிரு.ர்கள். அதனுலேயே ஐந்து வயதுக்குட்பட்ட பருவத்திற்கு மிக முக்கிய இடம் கொடுக்கிருர்கள். பிறப்பினால் பாரம்பரியமாகக் கிடைத்த வாழ்க்கை அமைப்பும், ஐந்து வயதிற்குள் சூழ்நிலையால் கிடைத்த வாழ்க்கை அமைப்புமே ஒருவனுடைய உலக வாழ்க்கை யின் கட்டுக்கோப்பைப் பெரும்பாலும் தீர்மானித்து விடுகின்றன. சூழ்நிலை எவ்வாறு இதில் பெரியதோர் பங்கு கொள்கின்றது என்பதையும் நாம் நன்கு உணரவேண்டும். (இது பற்றி விரிவாகப் பாரம்பரியம் என்னும் நூலில் எழுதியுள்ளேன்.) பாரம்பரியமாய் அமைந்துள்ள திறமை ஒன்று, அது மலர்வதற்கு வேண்டிய சூழ்நிலையைப் பெருது போளுல் மங்கி மறைந்துவிடுகிறது. ஒவியக் கலையிலே இயற்கை யான திறமை பெற்ற ஒருவன் பிறந்தது முதல் தனது வாழ்நாள் முழுவதையும் ஒரு மலைக் காட்டிலே மாடுகளை மேய்த்துக்கொண்டு க ழி க் கி ரு ன் என்று வைத்துக் கொள்வோம். அவன் பாறைகளின்மீது சித்திரம் வரைய லாம் : மாடுகளின் உடம்பிலே செம்மண்ணையும், பச்சிலை களேயும். கரியையும் கொண்டு பார்ப்போர் மகிழும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/57&oldid=806617" இலிருந்து மீள்விக்கப்பட்டது