பக்கம்:குமரப் பருவம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய கிளர்ச்சிகள் 57 படங்கள் வரையலாம். அவனுடைய திறமை அந்த எல்லைக்கு மேலே வளர அதற்கு வேண்டிய வசதி யில்லாமையால் நின்று போய்விடும். இதைப் போலவே விரும்பத்தகாத தன்மைகளும் அவைகளுக்கேற்ற சூழ்நிலை ஏற்படாதபோது மறைந்து போகின்றன. இவற்றிலிருந்து ஒருவனுக்கு அமையும் குழ்நிலை எ ல் வ ள வு முக்கியமானதென்று உணர்ந்து கொள்ளலாம். இந்த உண்மையை உள்ளத்தில் வைத்துக்கொண்டு பார்க்கும்போது குழந்தைப் பருவமல்லாது குமரப் பருவ பருவமும் முக்கியம் பெறுகிறது. ஏனெனில், அந்தப் பருவத்தில் கிடைக்கும் சூழ்நிலையும் அவனுடைய வாழ்க்கைப் போக்கை நிருணயிக்க உதவுகின்றது. ஒவ்வொரு மனிதனும் ஒரு தனிப்பட்ட அமைப் புள்ள பிறவியாக நாம் காண்கிருேம். ஒருவனைப்போல :ாற்ருெருவன் எல்லா அம்சங்களிலும் ஒன்றுபட்டு இருப்ப தில்லை. தோற்றத்தில் மட்டுமல்ல, தன்மையிலும், திறமையிலும், நடத்தையிலும் இந்த வேறுபாட்டைக் காண்கிருேம். இந்த வேறுபாட்டிற்கு முக்கிய காரணங் களாக இருப்பவை அவனுடைய பாரம்பரிய அமைப்பு, வளர்ப்பு முறை, கல்வி, அவனுக்குக் கிடைத்த சந்தர்ப் பங்கள், மற்ற சூழ்நிலை முதலியனவாம். இவைகளெல்லாம் சேர்ந்து ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு தனித் தன்மையை உண் டாக்குகின்றன. இவைகளின் சேர்க்கையிலே ஒவ்வொரு வருக்கும் ஒரு தனி ஆளுமை (Personality) ஏற்படுகிறது என்றும் கூறுகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/58&oldid=806619" இலிருந்து மீள்விக்கப்பட்டது