பக்கம்:குமரப் பருவம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 குமரப் பருவம் ஆளுமை என்பதைத் திட்டமாக வரையறுத்துக் கூறுவது எளிதல்ல. அதன் விளைவிற்குக் காரணமாக உள்ளவற்றை வே ண் டுமா ன ல் எடுத்தியம்பலாம். ஏனெனில், ஆளுமை என்பது ஒருவனுடைய தோற்றம், மனத்திறமைகள், மனக்கிளர்ச்சிகள், குணம், பண்பாடு, நடத்தை, பழக்கம், உரையாடும் நயம் முதலான எல்லா அம்சங்களின் மொத்த விளைவாக அமைவது ; அதை வரையறுப்பதற்குக் கூறு ம் விளக்கவுரைகளெல்லாம் பூரணத் தன்மை பெருது குறைபாடு உடையனவாக இருக்கும். இந்த ஆளுமையின் வடிவமெல்லாம் பத்து வயதிற் குள்ளே அமைந்துவிடுகின்றது என்று அறிஞர்கள் கூறு கிருர்கள். இருந்தாலும் குமரப் பருவத்திலே ஏற்படும் புதிய உள்ளக் கிளர்ச்சிகளும், முக்கியமாகப் பாலுத்தல் சம்பந்த மான கிளர்ச்சிகளும், அறிவு வளர்ச்சியும், பகுத்தறிவுத் தன்மையும் ஆளுமையை நிச்சயமாக அமைப்பதற்குக் காரணமாகின்றன என்பதை மனதிற் கொள்ளவேண்டும். சின்னக் குழந்தை மிகுந்த சுயநலமுடையது. ஆனல், வயது வரவரப் பலரிடம் இந்த சுயநலம் மறைந்து ப்ோகும். பத்து வயதிற்கு முன்பே இந்தத் தன்மை ஏற் படலாம். சுயநலம் மிகுந்த ஒரு சிலர் அதனல் தமக்கு மதிப்புக் குறைவதைப் பகுத்தறிவால் உணரக்கூடிய குமரப் பருவத்தில் தாராள சிந்தை உடையவராக முழுமையாகவோ ஒரளவிற்கோ மாறலாம். ஆளுமைத் தன்மையிலே சில முக்கியமான வகை களைக் கண்டிருக்கிரு.ர்கள். அவையாவன : அகநோக்குடையவர்-புறநோக்குடையவர் ஆதிக்கம் செலுத்துபவர்-அடங்கியிருப்பவர் கொள்கை ப்ேசியிருப்பவர்-செயலிலே ஈடுபடுபவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/59&oldid=806621" இலிருந்து மீள்விக்கப்பட்டது