பக்கம்:குமரப் பருவம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




குமரப் பருவம்


இடைப் பருவம்
       "குழந்தை-அவனுக்கென்ன தெரியும்? அவன் ஏதாவது சொன்னால் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை" என்று சாதாரணமாகச் சொல்லுவதை நாம் கேட்டிருக்கிறோம்.
       தந்தைக்கும் தாய்க்கும், பாட்டிக்கும் பாட்டனுக்கும் அவன் இன்னும் குழந்தையாகவே தோற்றமளிக்கிறான். அவன் குழந்தைப் பருவத்தைக் கடந்து குமரப் பருவத்திற்கு வந்துவிட்டதை அவர்கள் விரைவிலே உணர்ந்து அந்த மாறுதலுக்கு ஏற்றவாறு அவனை நடத்துவதில்லை.
       குமரனுக்கு இது வருத்தத்தைக் கொடுக்கிறது. "என்னை இன்னும் அவர்கள் குழந்தையாகவே நடத்துகிறார்கள். நானும் மனிதன்தான் என்று அவர்களுக்குத் தெரியவில்லை" என்று அவன் எண்ணி ஏக்கமடைகிறான்.
       வாழ்க்கையிலே இதுபோன்ற ஒரு நிலைமை ஆணுக்கு மட்டும் ஏற்படுவதல்ல; பெண்ணுக்கும் இதே மாதிரி எண்ணி ஏங்கும் ஒரு காலம் அவள் வாழ்க்கையிலே வருகிறது.
       குழந்தைப் பருவம் கடந்துவிட்டது; மெய்தான். ஆனால், இன்னும் முதிர்ந்த பருவம் வரவில்லை. முதிர்ந்த ஆணென்றோ முதிர்ந்த பெண்ணென்றோ இன்னும் யாரும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவில்லை. குழந்தைப் பருவத்திற்கும் முதிர்ந்த பருவத்திற்கும் இடையிலே ஒரு பருவம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/6&oldid=1229651" இலிருந்து மீள்விக்கப்பட்டது