பக்கம்:குமரப் பருவம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய கிளர்ச்சிகள் 50 இவ்வாறு வகைப்படுத்தியிருப்பதால் மக்களையும் எளிதாக இதே முறையில் திட்டமாக வகைப்படுத்தி விடலாம் என்று நினைக்கக் கூடாது. அகநோக்குடையவரே இரளவிற்குப் புறநோக்குடையவராகவும் இருக்கலாம். ஆதிக்கம் செலுத்த முயல்பவரே சில சமயங்களில் அல்லது சில சந்தர்ப்பங்களில் அடங்கிக் கீழ்ப்படிந்து மிருக்கலாம். மேலே குறித்த தன்மைகள் எல்லாமும் ஒவ்வோர் அளவிற்குப் பெரும்பாலும் எல்லோரிடமும் கலந்தே இருக்கும். எந்தத் தன்மை மிக அதிகமாக இருக் கிறதோ அதை வைத்து வேண்டுமானல் அவருடைய ஆளுமையின் தன்மையை எடுத்துக் கூறலாம். ஆதிக்கம் செலுத்துகின்ற ஆளுமைத் தன்மை ஏற் படுவதற்கு உதவியாக இருக்கும் சில அம்சங்களாவன : (1) இளமையிலேயே வாழ்க்கையில் பொறுப் பேற்றுக் கொள்ளுதல். (2) தன்னம்பிக்கையிலும், சுயமுயற்சியிலும் சிறு வயதிலிருந்தே பெற்றேர்கள் பயிற்சியளித்தல். (3) குழந்தைப் பருவத்திலும், குமரப் பருவத்தி லும் சமூகத் தொடர்புகள் நிறைய இருத்தல். (4) ஆதிக்க உணர்ச்சியைத் தடைப்படுத்தாது குழந்தை வளரக் குடும்பத்தினர் நடந்து கொள்ளுதல். (5) ஆட்டங்களிலும், பந்தயங்களிலும் உயர்வு பெறுதல். (6) உடலிலும், மனத்திறமையிலும் உயர்வு பெற் றிருத்தல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/60&oldid=806625" இலிருந்து மீள்விக்கப்பட்டது