பக்கம்:குமரப் பருவம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 குமரப் பருவம் அடங்கியிருக்கும் ஆளுமைத் தன்மை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் சில முக்கிய அம்சங்கள் : (1) (2) (3) (4) (5) (6) (7) (8) உடற் குறைபாடுகள். அதிகத் திறமையுள்ளவரோடு ஒப்பிட்டுப் பேசிப் பேசிச் சிறுமைப்படுத்தல். மலர்ச்சியெய்துகின்ற காலத்தில் ஏற்படும் கிளர்ச்சிக் கோளாறுகள். குடும்ப வாழ்க்கை நிலையில்லாதிருத்தல். சுயமுயற்சிக்குச் சந்தர்ப்பமே கிடைக்கா திருத்தல். கூடப் பழகுவோர் கேலி செய்து இழிவு படுத்துதல். பாலுந்தலின் விளைவாக இயற்கைக்கு மாரு கவும், சமூக விதிகளுக்கு விரோதமாகவும் நடந்து அவற்ருல் ஏற்படும் அவமான உணர்ச்சிப் போராட்டங்கள். பெற்ருேர்கள் விதிக்கும் கடுமையான கட்டுப் பாடுகளும் போதனைகளும். பெற்ருேர்களின் தன்ம்ையும் நடத்தையும், குழந்தை களை வளர்க்கும் முறையும் ஆளுமையை உருவாக்குவதில் பெரும்பங்கு கொள்ளுகின்றன. அடிக்கடி இடித்துக் கூறுவதும், பழிப்பதும், கடுமையான கட்டுப்பாட்டிற்குள் நடத்துவதுமாயுள்ள தாய்தந்தையர்களால் வளர்க்கப் பட்ட பையனும் பெண்ணும் பள்ளியிலும் மற்றப் பொது இடங்களிலும் தொல்லை கொடுக்கக் கூடியவர்களாகவே இருக்கிருர்கள். சண்டை மூட்டுதல், கீழ்ப்படியாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/61&oldid=806627" இலிருந்து மீள்விக்கப்பட்டது