பக்கம்:குமரப் பருவம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய கிளர்ச்சிகள் 61 நடத்தல், அமைதியற்றிருத்தல் ஆகிய தன்மைகள் அவர் களிடம் இருப்பதைக் காணலாம். வீட்டில் வெறுங் கட்டுப்பாட்டாலும், பயத்தாலும் அடக்கியொடுக்கப்பட் டிருப்பதால் வெளியிலே அவையில்லாதபோது இப்படிப் பட்ட போக்கு ஏற்படுகிறது. வளர்ப்புமுறை மாறியிருந் தால் இப்படிச் சாதாரணமாக ஏற்படாது. பெற்ருேர்களால் அன்புடனும் நிதானத்துடனும் வளர்க்கப்பட்டவர்களிடம் கீழ்ப்படிந்து ந ட க் கு ம் தன்மையும், இன்முகமும், அமைதியுமிருக்கக் காணலாம். முடிவுரை :--இதுவரை கூறியவற்றை யெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது நமக்குப் பல உண்மைகள் புலனுகும். வாழ்க்கையின் அமைப்பெல்லாம் குழந்தைப் கிருவத்திலேயே அரும்புவிட்டு முகையாகின்றதென்ருல் அதன் மலர்ச்சி குமரப் பருவத்திலே ஏற்படுகின்றது. முதிர்ந்த பருவ வாழ்க்கைக்குக் குமரப் பருவம் வாயிலாக அமைந்துள்ளது. அந்தப் பருவத்திலே ஏற்படும் புதிய உள்ளக் கிளர்ச்சிகளிலெல்லாம் தாறுமாருண போராட் டங்கள் இல்லாது அடங்கி அமைந்தால் முதிர்ந்த பருவ வாழ்க்கை திருப்திகரமாக அமையும். (குழநதைப் பருவத் திலேயே உருவாகத் தொடங்கி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக அமையும் ஆளுமை குமரப் பருவத்தி,ல திட்டமாக அமைந்துவிடுகிறது. அது திருப்தியாக 4மை வதற்குச் சாதகமாக சூழ்நிலையும் மற்ற சந்தர்ப்துங்களும் அமையவேண்டும். பெற்ருேர்களும், குமரப் பருவத்தோ ரிடம் அதிகமாகப் பழகும் மற்றவர்களும் இதில் பெரிதும் உதவியாக இருக்க முடியும். குமரப் பருவம் எய்திய ஆணையும் பெண்ணையும் அந்தப் பருவத்திலும் குழந்தை யாகவே கருதி நடத்தாமல் அவர்களுக்குகந்த பொறுப் பையும், சுதந்தரத்தையும் கொடுக்கவேண்டும். பெற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/62&oldid=806629" இலிருந்து மீள்விக்கப்பட்டது