பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜடை பில்லை

95

இவற்றைத் திட்டமாகச் செய்வாள். அதற்குமேல் எது செய்யச் சொன்னாலும் காசைக் கீழே வை என்பாள். விறகுக் கடையிலிருந்து விறகு கொண்டுவர வேணுமா. தனியே இரண்டணாக் கொடுக்க வேணும்; கோதுமை அரைத்து வரவேணுமா, அரையனவாவது கொடுக்க வேணும் ஏதாவது அரைக்கச் சொன்னால் தனிக் கூலி. கடை கண்ணிக்குப் போய் வா என்று சொல்லிவிட்டால் போதும்; அவள் முணுமுணுப்பைச் சொல்லி முடியாது.

கம்பெனியில் வேலை செய்யும் வேலைக்காரர்களிடம் நான் ஒரு வேலை சொல்லக்கூடாது. அப்படி அவர் திட்டம் பண்ணியிருந்தார். இப்படியானல் வேலை.எப்படி நடக்கும்? இந்த நிலையில் எனக்குச் சமயசஞ்சீவியாகச் சொக்கநாயகி வந்து சேர்ந்தாள். கலகலவென்று பேசுவாள். அவளுக்கு ஒளிவு மறைவு என்பதே இல்லை

ஒருநாள், "உன் புருஷர் ஏன் பொன் வெள்ளி வேலையை விட்டுவிட்டார்?" என்று கேட்டேன்.

"விடுகிறதாவது, அம்மா? அவர் அதைத் தொடவே இல்லையே! அவர் தகப்பனார் அவரைப் பள்ளிக்கூடத்தில் படிக்கவைத்தார். அப்போதிலிருந்தே அவருக்குத் தொழில் என்றால் வெறுப்பாம். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. தொழிலுக்குக் கெளரவம் உண்டு என்று அடிக்கடி சொல்லிக்கொள்கிறார் 'நான்கூடத் தொழில் பழகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்' என்று கூடச் சில சமயம் வேதனைப்பட்டுக்கொள்வார்" என்றாள் அவள். ‘. ." . . .

அந்தச் சொக்கநாயகி இன்று வரவில்லை. ஏதோநினைத்துக்கொண்டேன். மேலே இருந்து பெட்டியைக் கீழே கூடத்துக்குக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு திறந்து பார்த்தேன். எங்கே வைத்துவிட்டேனே என்று கவலைப் பிட்டுக்கொண்டிருத்த ஜடைபில்லயைக் கண்டேன்.

அதைக் கண்டவுடனே அம்மா ஞாபகத்தான் வந்தது. எத்தனை அன்பாக அதை எனக்குக் கொடுத்தாள்! "சுந்தரி,