பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

குமரியின் மூக்குத்தி

இந்த ஜடைபில்லை ஆகி வந்தது. இதை ஜாக்கிரதையாக வைத்துக்கொள். இந்தச் சிவப்புக் கல்எங்கும் கிடைக்காது. இதை நான் தலையில் வைத்துக்கொண்டு நவராத்திரி ஜோத்திரைக்குப் போனேன். அப்போது உங்கள் அப்பா என்னைக் கண்டார். அப்புறம் கல்யாணம் ஆயிற்று. இதைப் பிரித்துவிடாதே! கல் நன்றாக இருக்கிறதென்று பிரித்து மோதிரம், கடுக்கன் என்று செய்யத் தோன்றும். இதைப் .பிரிக்காமலே வைத்திரு. உன் மூத்த பெண்ணுக்கு இதைச் சூட்டி அழகு பார். அவளுக்கே பிற்காலத்தில் கொடுத்து விடு..." அவள் என்ன என்னவோ சொன்னாள். வரும் காலத்தை ஒவ்வொருவரும் தம் கையில் வைத்துக்கொள்ளத்தான் ஆசைப்படுகிறார்கள்; திட்டம் போடுகிறார்கள். ஆனால் இது நம்மிடம் அகப்படுவதில்லையே!

என்னுடைய மூத்த பெண்ணுக்குக் கொடு என்று அம்மா உபதேசம் செய்தாள். மூத்த பெண்ணு? எனக்கு ஒரே ஒரு பெண்தான் பிறந்தாள். அம்மாவுக்கு அது தெரியும். ஆனால் அந்தக் கடன்காரி பன்னிரண்டு வருஷம் வளர்ந்து தன் கடனை வாங்கிக்கொண்டு போய்விட்டாள். அப்புறந்தான் எத்தனையோ தவம் பண்ணிச் சிவகுமாரன் -பிறந்தான். ஆமாம். அவள் போகிறபோது இவன் வயிற்றில் இருந்தான்.

ஜடைபில்லேயை எந்தப் பெண்ணுக்குக் கொடுப்பது? சுவாமி என்னை வாழைமரத்தைப்போல வைத்துவிட்டார். ஒரு குலை தள்ளியதோடு நிற்கிறதல்லவா வாழை சே சே! எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தார்களே! இருந்தாலும் உருப்படியானது - முருகா, சண்முகா, குழந்தை தீர்க்காயுசாக இருக்கவேண்டும்.

என்னவோ சொல்லவந்தேன்; மனசு எப்படி எப்படியோ தாவுகிறது. அம்மாவுக்கு ஜோசியம் தெரிந்திருந்தால் அப்படி எல்லாம் சொல்லியிருக்க மாட்டாளோ என்னவோ! இந்த ஜடைபில்லையைப்பற்றிச் சொல்லும்