பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

குமரியின் மூக்குத்தி


'“எங்கள் அம்மா கொடுத்தது. ஒன்றரைப் பவுன் தங்கம் போட்டுச் செய்ததாம். இதை அழிக்கக்கூடாதென்று வைத்திருக்கிறேன்...வந்து ... அந்தப் பிள்ளையாண்டான் எந்த ஊர்க்காரன் என்று சொன்னாய்? ”

"சேந்தமங்கலமாம்.”

“'அடே, அதே ஊர்தான் போல் இருக்கிறது!"”

"என்ன அம்மா சொல்கிறீர்கள்? உங்களுக்கு அந்த ஊர் தெரியுமா?"

நான் சற்றுச் சிந்தனையில் ஆழ்ந்தேன். “'சேந்தமங்கலந்தானே? இந்த ஜடைபில்லையைக்கூட அந்தச் சேந்த மங்கலத்தில்தான் யாரோ பண்ணினார்களாம்'” என்றேன்.

"அப்படியா, ஆச்சரியமாக இருக்கிறதே. அம்மா! இது நல்ல சகுனமாகக்கூடத் தெரிகிறது. நான் சேந்தமங்கலத்துப் பிள்ளையைப்பற்றிச் சொல்லவந்தேன். நீங்கள் சேந்தமங்கலத்து ஐடைபில்லையைக் காட்டுகிறீர்கள்!” அவள் காணாததைக் கண்டதுபோல ஆச்சரியத்தில் மூழ்கிப் போனாள்.

ஐயோ பாவம்! இதன் பூர்வ கதையை அவள் அறிந்தால்? அவளுக்கு எதற்கு அது தெரியவேணும்? அவள் அடைகிற சந்தோஷத்தை நாம் அதிகமாக்க முடியாவிட்டாலும் அதைக் கெடுப்பானேன்?

2

ரு வாரம் கழித்துச் சொக்கநாயகி வந்தாள். ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள்; சீக்கிரம் செய்து விட்டு வீட்டுக்குப் போகவேண்டும்" என்றாள். என்னிடம் உள்ள அன்பினால் எனக்கு உதவி செய்வது அவள் இயல்பு. கடைக்குப் போய் ஏதாவது வாங்கி வருவாள்; சாமான்களை ஒழுங்குபண்ணி வைப்பாள். -

'ஏன் இந்த அவசரம்?" என்று கேட்டேன்.