உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

குமரியின் மூக்குத்தி



'என்ன அம்மா இது? விலைக்கு வாங்கிக்கொள்ளத் தான்.....

“அதைப்பற்றிப் பேசாதே. போய் முதலில் காரியத் தைக் கவனி.”

4.

மீனாட்சி கருவுற்றிருந்தாள். அவளை வரதப்பன் அழைத்துக்கொண்டு வந்திருந்தான். '“அம்மா, உங்கள் பெண் நாளைக்கு உங்கள் மருமகப் பிள்ளையோடு வரப் போகிறாள்”” என்று முதல் நாளே சொக்கநாயகி சொன்னாள். ஆம், என் நிபந்தனைகளை அவள் ஒப்புக்கொண்டு விட்டாள்.

‘'என் பெண்’ மீனாட்சி வந்தாள். வரதப்பனுடன் பேசிப் பழகினேன். நல்ல பிள்ளை; சாமர்த்தியசாலி.

ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்தான். பேசிக்கொண்டிருந்தான். "ஏன் அப்பா, அந்த ஜடை பில்லயை ஜாக்கிரதையாக வைத்திருக்கிறாயா? என்றேன்.

“'ஜாக்கிரதையான இடத்தில் இருக்கிறது”” என்றான்.

“"ஆமாம்; அதைக் கொண்டுவந்து கொடுத்தால்தான் மறு காரியம் என்று அன்று தடபுடல் பண்ணிவிட்டாயாமே! அப்படிச் செய்யலாமா? என்று கேட்டேன்.”

"செய்யக் கூடாதுதான். ஆனால் நான் அதற்கு ஆசைப் பட்டதற்குக் காரணம் உண்டு. அது ஒரு கதை."

சேந்தமங்கலம் வரதப்ப ஆசாரியார் பொற்கொல்லர்களில் சிறந்தவர். சாஸ்திரம் தெரிந்தவர். ஆலயங்களுக்கு வேண்டிய நகைகளைச் செய்கிறவர். அவருடைய பேரன்தான் இந்த வரதப்பன். வரதப்ப ஆசாரியார் ஒரு சமயம் அந்த ஊர் வரதராஜஸ்வாமி கோயில் தாயாருக்கு ஒரு ஜடை பில்லை செய்தார். ஒரு ஜமீன்தாருடைய பிரார்த்தனை அது. அவர் நல்ல சிவப்புக் கல்லாக வாங்கிக் கொடுத்தார். உறுதியான கட்டடமாக இருக்க வேண்டுமென்று