பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜடை பில்லை

107



சொன்னார். ஒன்றரைப் பவுனுக்கு மேலே தங்கம் போட்டு மிகவும் நன்றாக அன்னமும் கொடியுமாகச் சிற்பம் அமைத்துச் செய்தார். மிகவும் அழகாக இருந்தது நகை. அதைக் காணும்போது அவருக்கே அதில் ஆசை விழுந்தது. அப்போது அவர் புதிதாகக் கல்யாணம் செய்துகொண்டிருந்தார். தம் மனைவிக்கும் அப்படி அதே அச்சில் ஒன்று செய்து அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டார். கோயிலுக்கு நகையைச் செய்து கொடுத்துவிட்டார். சில வருஷங்களாகக் கல் சேர்த்துத் தம் மனைவிக்கும் அதே அச்சில் ஒன்று செய்து அளித்தார். ஆனால் அதை அணிந்த, மறுவருஷம் அவர் மனைவி காலமாகி விட்டாள். தாயாருக்குச் செய்த நகையில் ஆசை வைத்ததற்குத் தண்டனை என்று எண்ணி அவர் வருந்தினார். இரண்டு குழந்தைகள் இருந்தமையாலும் வயசு நாற்பத்தைந்து ஆகிவிட்டபடியாலும் அவர் வேறு கல்யாணம் செய்துகொள்ளவில்லை. அதுமுதல் ஒரு விரதம் எடுத்துக்கொண்டார். இனிமேல் நகை செய்வதானால் ஆலயங்களுக்குத்தான் செய்வது' என்று. அவர் தீர்மானித்தார். அவரிடம் கோயிலுக்குப் பின் கோயிலாக வந்துகொண்டே இருந்தது.

தம் மனைவி அணிந்திருந்த ஜடை பில்லையை அவர் யாருக்கோ விற்றுவிட்டார். அதைக் கண்டாலே அவருக்குப் பிடிக்கவில்லை.

'இந்தக் கதையை என்னுடைய தகப்பனார். எனக்குச் சொன்னார் நான் அம்மா அணிந்திருந்த ஜடை பில்லையைப் பார்த்திருக்கிறேன். கோயிலில் தாயாருடைய ஜடை பில்லை எப்படியோ அப்படியே இருக்கும். என்ன அழகான கல்! என்ன அற்புதமான வேலைப்பாடு' என்று அப்பா அடிக்கடி சொல்வார். நான் கோயிலில் பெருமாளையும் தாயாரையும் தரிசிக்கும்போது என் கண் அந்த ஜடை பில்லையைத் தேடும். உற்சவ காலங்களில்தான் அலங்காரம் பண்ணுவார்கள். அப்போதெல்லாம் நான் தாயாருக்குப்