பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

குமரியின் மூக்குத்தி



பின்னாலே போய் ஜடை பில்லையைப் பார்ப்பேன். ‘எங்கள் தாத்தா பண்ணின இரண்டு ஜடை பில்லைகளில் ஒன்று மனிதரை அடைந்தது. மற்றொன்று தெய்வத்தை அடைந்தது. தெய்வத்தை அடைந்த இது நித்திய அழகோடு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது! மற்றொன்று யார் தலையில் ஏறியதோ? எப்படி இருக்கிறதோ? இப்போது அதை யார் அணியப் போகிறார்கள்? பிரித்துக் குலைத்திருப்பார்கள்' என்று எண்ணமிடுவேன்.

'அன்று தை வெள்ளிக்கிழமை. பாவி நான் கண் போட்டதனாலோ என்னவோ தாயார் கோயிலுக்குள் எழுந்தருளியபோது விக்கிரகம் கீழே விழுந்துவிட்டது. மல்லாக்க விழுந்தமையால் விக்கிரகம் சேதமில்லாமல் பிழைத்தது. ஆனால் ஒரு கல்லின்மேல் தாக்கியமையால் ஜடை பில்லை சிதறிப் போயிற்று. நானே அதைக் குலைத்தது போன்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அந்த ஐடை பில்லையின் முழு உருவமும் அப்படியே என் அகக்கண்ணில் நின்றது.

"இந்த வேதனையைப் போக்கியது உங்கள் ஜடை பில்லை. அதே அச்சு. நிச்சயம் இது பழைய ஜடை பில்லைதான் என்று தெரிந்துகொண்டேன். எனக்குக் கல் கோட்டம் தெரியும் அல்லவா?” - -

'“இது உன் தாத்தா செய்ததுதான் என்று எப்படித் தெரியும்?”” என்று கேட்டேன்.

“தொழிலாளிக்கு அடையாளம் நன்றாகத் தெரியும், அம்மா. இதைக் கண்டவுடன் மீனாட்சியைக் கட்டிக் கொள்வதென்று தீர்மானம் செய்துவிட்டேன்.”

"அப்படியானல், மீனாட்சியை நீ பார்த்துப் பிரியப் படவில்லை. இந்த ஜடை பில்லைக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டாய் என்று சொல்.”

"அப்படி இல்லையம்மா. இவள்தான் என்னை முதலில் கவர்ந்தாள். பிறகு குலம், கோத்திரம், சீர், செனத்தி