பெண் உரிமை
1
'கல்யாணி, உனக்கு இன்னும் பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகவில்லையா? எவ்வளவு நாழிகை அப்படியே உட் கார்ந்திருப்பாய்? எப்போது குளிக்கிறது, எப்போது சாப் பிடுகிறது?”
"இன்றைக்குத்தான் பள்ளிக்கூடம் இல்லையென்று சொன்னேனே, அம்மா. எங்கள் பழைய தலைமை ஆசிரியர் இறந்து போனார். அதற்காக விடுமுறை.”
'மனிதர்கள் தினமுந்தான் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக விடுமுறை விட்டுக்கொண்டே இருந்தால், இருக்கிறவர்கள் படித்து முன்னுக்கு வரவேண்டாமா?-இந்தக் கிழங்கு வேண்டாம் வேண்டாம் என்று முட்டிக் கொண்டேன். கேட்கிறாரா? கழற் கோடி கழற் கோடியாக எதையோ வாங்கிக்கொண்டு வந்து உருளைக் கிழங்கு என்று கொடுக்கிறார் உங்கள் அப்பா. பாதிக்குமேல் தோல்!...இன்னும் உன் மாமா கடிதமே போடவில்லை...
' கல்யாணியின் அம்மா இப்படிச் சமையல் அவசரத்தில் தன் பேச்சை அவியலாக ஆக்கிக்கொண்டிருந்தாள்.
"ஏன் அம்மா, லொடலொட என்று கத்திக்கொண்டே இருக்கிருய்? இந்தக் கதையைப் படித்து முடிக்கிற வரையும் உன் திருவாயை மூடிக்கொண்டு இருக்க மாட்டாயா?” என்று கோபத்தோடு சொன்னாள் கல்யாணி,
"என்ன கதை அது, அப்படி என்னை வாயடைக்கும்படி செய்ய?"
'உன் வாயை அடக்கும் கதைதான் இது. படிக்கிறேன், கேட்கிறாயா? சதா கல்யாணம், கல்யாணம் என்று