பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

குமரியின் முக்குத்தி

 அவளோ மேலும் மேலும் படித்து, விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டுமென்று சொல்கிறாள். அப்பா அவளிடம் கல்யாணம் பண்ணிக்கொள் என்று சொல்கிறார். அப்போது அந்தக் கல்யாணி சொல்கிறாள்: அதைப் படிக்கிறேன், கேள்......” - .

சரி, சரி, வாசி." 'அந்தப் பெண் சொல்கிறாள்: அப்பா, நான் ஆண் பிள்ளையாகப் பிறந்திருந்தால் என்னை இப்படித் தொந் தரவு செய்வீர்களா? பெண்ணாகப் பிறந்தாலே பிறர் சொன்னபடிதான் நடக்க வேண்டுமென்று நீங்கள் சொல்லும் பிரமதேவன் தலையில் எழுதிவிடுகிறானா? அவளுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இல்லையா? அறிவு இல்லையா? சுதந்தரம் இல்லையா? பெண்ணுக்கு இன்பம் வேண்டும் என்று கல்யாணம் செய்து வைக்கிறீர்கள். அதை இன்பம் என்று விரும்புபவர்களுக்கு நீங்கள் குசாலாய்க் கல்யாணம் செய்து வையுங்கள். அறிவுலகத்திலே நட்சத்திரமாக, சந்திரனாக ஏன்-குரியனாகவே ஒளிர வேண்டும் என்று ஆசைப்படுகிற பெண்களை அவர்கள் போக்கிலே விட்டால் ஆணுலகத்துக்கு அவமானம் உண்டாகி விடுமா?" -

போதும், போதும் இந்தப் பிரசங்கம்! யாரோ, பொழுதுபோகாதவன் எழுதியிருக்கிறானாம் இவள் வாசிக் கிறாளாம் காலம் கலிகாலம்!"

ஏட்டுச் சுரைக்காய்கறிக்கு உதவாது. அந்தக் கல்யாணி எக்கேடு கெட்டால் எனக்கு என்ன? இந்தக் கல்யாணி கல்யாணம் செய்துகொண்டு என் கண்முன் குடித்தனம் பண்ணிக் குழந்தை குட்டிகளோடு வாழப் போகிறதைக் கண்ட பிறகுதான் நான் செத்துப் போவேன்'

இப்படி இவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போது கல்யாணியின் தந்தை ராமசாமி வெளியிலிருந்து வந்தார்.