பெண் உரிமை
113
இங்கே கல்யாணி படுத்துகிற பாடு என்னால் சகிக்க முடியவில்லை. ஊரிலே இருக்கிற சோம்பேறிகளெல்லாம் கதை எழுதுகிறார்களாம்! நல்லதாக எழுதக் கூடாதோ?” என்று அந்த அம்மா சொல்வதைக் கேட்டு, 'கல்யாணி, இன்றைக்கு என்ன சொற்பொழிவு ஆயிற்று?’ என்று கேட்டார் ராமசாமி.
"நான் சொற்பொழிவு செய்யவில்லை அப்பா, இந்தக் கதையில் ஒரு கல்யாணி வருகிறாள். அவள் என் கருத்துக்கு இணங்கச் சுதந்தர வாழ்வு வாழ்கிறவள். அவள் பேசுவதாகக் கதையில் ஒரு பகுதி வருகிறது. அதைத்தான் வாசித்துக் காட்டினேன்.”
'நீ முதலில் படித்து இந்தப் பரீட்சையில் தேறு; பிறகு பார்த்துக் கொள்ளலாம் உன் சுதந்தர வாழ்வை. இப்போதே அதைப்பற்றி ஏன் வீண் வாதங்கள்?" என்று சொல்லிவிட்டு ராமசாமி குளிக்கப் போனார்.
***
சிறிய ஆரம்பப் பாடசாலையின் தலைமை உபாத்தியாயராகிய ராமசாமியின் மூத்த பெண் கல்யாணி எஸ். எஸ். எல். ஸி. படித்துக்கொண்டிருந்தாள். முதல் குழந்தை ஆகையால் அவளுக்குச் சின்னஞ்சிறு பிராயத்திலே படிப்பிலே உற்சாக மூட்டினார் ராமசாமி. அவளும் சுறுசுறுப்பாகப் படித்து வந்தாள். ஒவ்வொரு வகுப்பிலும் அவள் நிறையப் புள்ளிகள் பெற்றுத் தேர்ச்சியும் பரிசும் பெற்றாள். -
கல்யாணி இளம் பெண் ஆனாலும் புத்திசாலி. அவளுக்குச் சிட்டுக் குருவி மேல் ஆசை. அதைப் போல விட்டு விடுதலையாகி நிற்பதிலும் ஆசை. நாமும் படித்து உத்தியோகம் செய்ய வேண்டும்; காசும் சம்பாதிக்க வேண்டும்; புகழும் சம்பாதிக்க வேண்டும் என்பது அவள் கட்சி.
குமரி-8