பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 குமரியின் மூக்குத்தி

இங்கே வந்தபோது அவன் மனைவி பூண்டிருப்பதை நம் மாதேவி கண்டாள். எங்கும் இல்லாத ஒளியும் பூரிப்பும் உடைய அதில் அவள் உள்ளம் சிக்கிக்கொண்டதாம்.'

'அனந்தபதுமன் நமக்கு அடங்கிய சிற்றரசன்தானே? அவனுக்கு ஒலை போக்கினால் அதை மகாராஜாவின் காலடி யில் காணிக்கையாகக் கொண்டு வந்து வைக்கிறான்’ என்று உற்சாகத்துடன் கூறினான் தொண்டைமான்.

'முடியுடை மன்னனாகிய சோழ சக்கரவர்த்தி தன் கீழ் அடங்கிய சிற்றரசன் ஒருவனிடம் மூக்குத்தியை இரப்பதா? அவனாக அறிந்து கொடுப்பதாக இருந்தால் பெற்றுக் கொள்ளலாமே ஒழிய, நீ தா என்று கேட்டுப் பெற்றுக் கொள்வது எந்தத் தமிழ் மகனுக்கும் ஏற்ற செயல் அன்று.”

'அதற்கு ஏதாவது வழி பண்ணுகிறேன். இதுபற்றி மகாராஜாவும் மாதேவியாரும் இனிமேல் கவலைப் பட வேண்டாம். எப்படியாவது அந்த மூக்குத்தியைக் கொண்டு வந்து மாதேவியாரின் மனசைக் குளிர்விப்பது அடியே னுடைய கடமை" என்று கருணாகரன் உறுதிமொழி கூறினன்.

இளைஞனகிய அவனுக்கு உலக இயல்பு நன்றாகத் தெரியாது. இதனால் தான் இப்படி வாக்களித்தான். ஆனல் அந்த வாக்கைக் காப்பாற்ற அவன் எவ்வளவு துன்பத்தை அடைந்தான் தெரியுமா?

2 கேளாய், மதுரை நகரிலிருந்து ஆட்சி புரியும் மகி பதியே சோழ மன்னனுக்கு, எப்படியாவது அந்த மூக் குத்தியைக் கொண்டு வருவதாகச் சொல்லி உறுதி கூறிய தொண்டைமான் அன்றுமுதல் சோழ நாட்டில் உள்ள வைர வியாபாரிகளுடன் பழகினான். வைரங்களைப்பற்றி யும் மற்ற மணிகளைப்பற்றியும் தெரிந்துகொண்டான்.