பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண் உரிமை

119



'நீங்கள் கதை எழுதுவீர்களா?” என்று கல்யாணி ஆவலோடு கேட்டாள்..

"மாமா அறிந்த ராமகிருஷ்ணனும், பத்திரிகையில் எழுதும் சுந்தரேசனும், நீ ஊகித்த சுந்தரியும் அடியேன் தான்!” என்று சொல்லி அவன் சிரித்தான்.

"அடடே, அப்படியா சமாசாரம்?” என்று நாராயணனும் கூடச் சிரித்தார். கமலமும் சிரித்தாள். கல்யாணி மாத்திரம் கிரிக்கவில்லை.

கல்யாணி தன்னுடைய எழுத்தில் எவ்வளவு மோகம் கொண்டிருக்கிறாள் என்பதை ராமகிருஷ்ணன் உணர்ந்து கொண்டான். தன் கருத்தை அவன் எவ்வளவு அழகாகக் கதைகளில் எழுதுகிறான் என்று அவள் ஆச்சரியப் பட்டாள். அவளை அறியாமலே அவள் மனம் அவனிடம் தாவியது. . -

ராமகிருஷ்ணன் சென்னைக்குப் போனான். கல்யாணி நாமக்கல் போனாள்.

கல்யாணி இப்போது அம்மாவுடன் வாதம் செய்வதை நிறுத்தி விட்டாள். அப்பாவிடம், கல்லூரிப் படிப்பில் வீண் செலவாகும்; அதனால் உங்களுக்கும் கஷ்டம்” என்று மாத்திரம் சொன்னாள். அறிவாளியாகிய அவர் தம் மகளின் மனமாற்றத்தைத் தெரிந்து கொண்டார். மேலே விசாரணை செய்தார். திருச்சிக்குப் போய்த் துப்பறிந்தார். கல்யாணிக்குக் கல்யாணம் செய்யும் முயற்சியைத் தொடங்கினர். .

ராமகிருஷ்ணனுக்கும் கல்யாணிக்கும் ஒரு சுப முகூர்த்தத்தில் கல்யாணமாயிற்று. அவள் சென்னை வாசியானாள். -

***

ல்யாணியும் ராமகிருஷ்ணனும் நாமக்கல்லுக்கு வந்திருந்தார்கள். அவள் இப்போது தாய்மைப் பருவத்தை