பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

குமரியின் மூக்குத்தி



அடைந்திருந்தாள். அவள் தாய் அவளைக் கண்டு பூரித்துப் போனாள். அவள் விரும்பியது நிறைவேறிவிட்டது.

பக்கத்து வீட்டுக்காரியோடு கல்யாணியின் தாய் பேசிக் கொண்டிருந்தாள். ஏதோ பேச்சு வந்தது. அப்படித் தான் சிறு பெண்ணாக இருக்கும்போது தோன்றும். வயசு வந்தால் மாறிவிடும். எங்கள் கல்யாணி எவ்வளவு லூட்டி அடித்தாள்! கல்யாணமே பண்ணிக்கொள்ளப் போவதில்லே என்று பிடிவாதமாகச் சொன்னாள். அப்படிப் பண்ணிக் கொண்டாலும் உத்தியோகம் பார்ப்பேன் என்று விறாப்புப் பேசினாள். இப்போது...' என்று அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த கல்யாணி அங்கிருந்த படியே, '“இப்போது நான் உத்தியோகம் பார்க்கத்தான் பார்க்கிறேன்””என்று சொன்னாள்.

திடுக்கிட்ட தாய் அவளைத் திரும்பிப் பார்த்து, 'அது என்ன கூத்து? என்ன உத்தியோகம் பார்க்கிறாய்?" என்று கேட்டாள்.

'குமாஸ்தா உத்தியோகம்.'

'எங்கே?

'வீட்டிலேதான். அவர் கதை எழுதுகிறார் என்று உனக்குத் தெரியுமே. இப்போது அவர் கதை சொல்கிறார்; நான் எழுதுகிறேன். அவருக்கு நான் குமாஸ்தா' என்று சொல்லிவிட்டுப் புன்னகை பூத்தாள் கல்யாணி.